உலகின் முதல் அணுகுண்டு வெடிப்பில் கிடைத்த ஒளிரும் கண்ணாடிகள் - கேட்ஜெட் சோதனை தெரியுமா?

கேட்ஜெட் அணுகுண்டு வெடித்த போது சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் அளவுக்கு வெப்பம் வெளியானது. ஒளிரும் கண்ணாடி துகள் போன்ற பொருட்கள் மழையாகப் பொழிந்தன. இவை பெரும்பாலும் பச்சை நிறத்தில் இருந்தன. சில அழகான கண்ணாடிக் கற்கள் போல இருந்தன.
உலகின் முதல் அணுகுண்டு வெடிப்பில் கிடைத்த ஒளிரும் கண்ணாடிகள் - கேட்ஜெட் சோதனை தெரியுமா?
உலகின் முதல் அணுகுண்டு வெடிப்பில் கிடைத்த ஒளிரும் கண்ணாடிகள் - கேட்ஜெட் சோதனை தெரியுமா?Twitter

அணுகுண்டு வெடிப்பு மனித இனத்தை அச்சுறுத்தும் சொல்லாக இன்றும் இருந்து வருகிறது. ஹிரோ ஷிமா, நாகசாகி வெடிப்புகளுக்கு பிறகு இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் பூமியில் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் மொத்த உலகமும் அக்கறை செலுத்துகிறது.

முதன் முதலாக இந்த பூமியின் வரலாற்றில் நடந்த அணுகுண்டு வெடிப்பு பற்றியும்,அதில் உருவான டிரினிடைட் என்ற விநோதமான பொருள் பற்றியும் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம். அமெரிக்காவுக்கும் ஜெர்மனிக்கும் மிகப் பெரிய அளவில் போட்டி இருந்தது. யார் அதீத நாசகரமான அழிவை உண்டாக்கும் ஆயுதத்தைக் கண்டு பிடிக்கப்போகிறார்? என்பது தான் அந்த போட்டி.

மன்ஹாட்டன் திட்டம்

போரில் வெற்றி பெற அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ரீதியான முயற்சிகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டதே மன்ஹாட்டன் திட்டம்.

இயற்பியலாளர்கள், வேதியியலாளர்கள், பொறியாளர்கள், கணிதவியலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என சுமார் 1,30,000 மக்கள் நேரம் காலம் பார்க்காமல் இந்த திட்டத்தில் பணியாற்றினர்.

மூன்று முக்கிய இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஓக் ரிட்ஜ் என்ற இடத்தில் யுரேனியத்தில் இருந்து பிளவுபடக் கூடிய பொருள் (fissile Maeterial) தயாரிக்கப்பட்டது.

வாஷிங்டனில் உள்ள ரகசிய ஹான்போர்ட் புளூட்டோனியம் உற்பத்தி ஆலையில் புளுட்டோனியம் தயாரிக்கப்பட்டது. யுரோனியம் படிவுகளில் காணப்படும் புளூட்டோனியம் சுவடுகள் இங்கே எடுக்கப்படும்.

மன்ஹாட்டன் திட்டம்
மன்ஹாட்டன் திட்டம்

இந்த திட்டத்தின் கீழ் தான் முதன் முதலாக அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. குண்டுகள் வடிவமைப்பு மற்றும் சோதனை நியூ மெக்ஸிகோவில் உள்ள லாஸ் அலாமோஸ் என்ற இடத்தில் நடத்தப்பட்டது.

மன்ஹாட்டன் திட்டத்தில் அறிவியல் இயக்குநராக இருந்த ஜே. ராபர்ட் ஓபன்ஹெய்மெர் தான் கேட்ஜெட் ஆணுகுண்டை வடிவமைத்தார்.

இதற்காக பின்னாளில் வருந்திய அவரது வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் அணுகுண்டு

உலகில் தயாரிக்கப்பட்ட முதல் அணுகுண்டின் பெயர் கேட்ஜெட். 1945ம் ஆண்டு ஜுலை 16ம் தேதி இது சோதிக்கப்பட்டது. இந்த சோதனைக்கு டிரினிட்டி சோதனை என்று பெயர் வைக்கப்பட்டது.

அணுகுண்டைப் பொருத்தவரை, புளூட்டோனியம்-239- ஐசோடோப்பால் ஆன மையக்கருவை ஒரு சாதாரண வெடிகுண்டு அழுத்தும்.

இதன் விளைவாக புளட்டோனியம் அதன் கிரிட்டிகல் மாஸை அடைந்து தொடர் பிளவை ஏற்படுத்தும். இது நம்மால் எண்ணிப்பார்க்க முடியாத அளவு ஆற்றலை வெளிப்படுத்தும்.

கேட்ஜெட் குண்டு வெடிப்பு ஒரு பாலைவனத்தில் நடத்தப்பட்டது. தோராயமாக 19 கிலோ டன் அளவுக்கு ஆற்றலை வெளியிட்டது எனக் கூறப்படுகிறது.

பாதுகாப்பான தொலைவில் இருந்த கருவிகளும் அழிந்தன.

உலகின் முதல் அணுகுண்டு வெடிப்பில் கிடைத்த ஒளிரும் கண்ணாடிகள் - கேட்ஜெட் சோதனை தெரியுமா?
77 ஆண்டுகளாக முன்னாள் ராணுவ வீரர் கழுத்தில் சிக்கியிருந்த குண்டு - மருத்துவர்கள் அதிர்ச்சி

உலகப்போரில் அணுகுண்டு

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா ஜப்பானின் மீது இரண்டு அணு குண்டுகளை வீசியது. லிட்டில் பாய் மற்றும் ஃபேட் மேன் எனப் பெரியடப்பட்ட அந்த குண்டுகள் கேட்ஜெட் குண்டில் இராணுவ பதிப்புகளே.

குண்டு வெடிப்பிலும் அதன் பின்னர் வெளியான கதிரியக்கத்தின் காரணமாகவும் பலர் உயிரிழந்தனர். மொத்தமாக 2 லட்சத்துக்கும் அதிகமான உயிர்களைப் பறித்தது இந்த குண்டுகள்.

மனிதர்களால் எந்த அளவு கொடூரமாக உலகை அழித்துவிட முடியும் என உலகுக்கு காட்டிய சம்பவம் உலகையே உருகுலைத்தது.

ஒளிரும் கண்ணாடி துகள்கள்

கேட்ஜெட் அணுகுண்டின் சோதனையின் போதே சூரியனின் மேற்பரப்பில் இருப்பதைப் போன்ற வெப்பம் வெளியானதாம்.

சில நூறு மீட்டர் தொலைவுக்கு ஒளிரும் கண்ணாடி துகள் போன்ற பொருட்கள் மழையாகப் பொழிந்தன. இவை பெரும்பாலும் பச்சை நிறத்தில் இருந்தன. சில அழகான கண்ணாடிக் கற்கள் போல இருந்தன.

குண்டு வெடிப்பின் நினைவாக இந்த படிமங்களை அவர்கள் சேகரித்தனர். இவற்றை டிரினிடைட் என்று அழைத்தனர். இந்த டிரினைட்களை சேகரித்தது மிகவும் மோசமான விஷயம் என்பதை அவர்கள் மிக தாமதமாக தான் உணர்ந்தனர்.

உலகின் முதல் அணுகுண்டு வெடிப்பில் கிடைத்த ஒளிரும் கண்ணாடிகள் - கேட்ஜெட் சோதனை தெரியுமா?
10 நிமிடங்களில் 130 குண்டுகள்; முதலாம் உலக போரில் சென்னையை தாக்கிய ஜெர்மனி - என்ன நடந்தது?

டிரினைட் கதிரியக்கத்தன்மை உடையதாக இருந்தது. இன்றும் இதனை வைத்திருக்கின்றனர். இன்று அதன் கதிரியக்கத்தன்மையை பாதிக்கு மேல்இழந்துவிட்டதால் அவற்றைப் பாதுகாப்பாக கையாள முடிகிறது.

கதிரியக்கத்தன்மையை இழந்தாலும் இதன் விசித்திரமான கட்டமைப்பு பண்புகள் மனித குலம் அழிந்தாலும் அப்படியே இருக்கும்.

உலகின் முதல் அணுகுண்டு வெடிப்பில் கிடைத்த ஒளிரும் கண்ணாடிகள் - கேட்ஜெட் சோதனை தெரியுமா?
உலகின் மிக சிறிய போர்: 38 நிமிடத்தில் நூற்றுக்கணக்கான உயிரிழப்பு - ஒரு விசித்திர வரலாறு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com