வெசிலி ஆர்க்கிபோவ்: 'ஓப்பன்ஹெய்மரை' தெரியும், அணுஆயுத போரை தடுத்துநிறுத்திய இவரை தெரியுமா?

மிகப் பெரிய அணு ஆயுதப்போராக வெடிக்க இருந்த 3ம் உலகப்போரைத் தடுத்தவர் தான் ரஷ்யாவைச் சேர்ந்த வெசிலி ஆர்க்கிபோவ். இவர் ஒரு ஆராய்ச்சியாளர் அல்ல, ரஷ்யாவின் முக்கிய இராணுவ அதிகாரி!
வெசிலி ஆர்க்கிபோவ்: 'ஓப்பன்ஹெர்மரை' தெரியும், அணுஆயுத போரை தடுத்துநிறுத்திய இவரை தெரியுமா?
வெசிலி ஆர்க்கிபோவ்: 'ஓப்பன்ஹெர்மரை' தெரியும், அணுஆயுத போரை தடுத்துநிறுத்திய இவரை தெரியுமா?வெசிலி ஆர்க்கிபோவ் / Wikipedia

கிறிஸ்டோபர் நோலனின் சமீபத்திய திரைப்படம் அணுகுண்டை உருவாக்கியவரும், ஹைட்ரஜன் குண்டை உருவாக்க மறுத்து அமெரிக்க அரசால் துன்புறுத்தப்பட்டவருமான ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையைப் பேசியது.

ஹைட்ரஜன் குண்டு கண்டுபிடிக்கப்பட்டால் அதனால் உலகம் பெரிய அளவில் அழிவை சந்திக்கும் என்பதை அறிந்திருந்தார் ஓப்பன்ஹெய்மெர்.

அதேப்போல மிகப் பெரிய அணு ஆயுதப்போராக வெடிக்க இருந்த 3ம் உலகப்போரைத் தடுத்தவர் தான் ரஷ்யாவைச் சேர்ந்த வெசிலி ஆர்க்கிபோவ். இவர் ஒரு ஆராய்ச்சியாளர் அல்ல, ரஷ்யாவின் முக்கிய இராணுவ அதிகாரி!

1962 அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பனிப்போர் நடைபெற்ற காலகட்டம். அக்டோபர் 22ம் தேதி ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் அவற்றுக்கு துணைக் கப்பல்கள் அமெரிக்க கடற்கரையில் இருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில், கியூபாவில் இராணுவ தளத்தை அமைத்தன.

அந்த நீர் மூழ்கி கப்பல்களில் அமெரிக்காவின் முக்கிய நகரங்களை சில நிமிடங்களில் ஒன்றும் இலலாமல் ஆக்கிவிடும் அளவு சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் இருந்தன.

இந்த இராணுவத்தளத்தின் இருப்பை கண்டறிந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி, பாதுகாப்பு நடவடிக்கைகள், ராணுவ வீரர்களைத் தயார்படுத்துதல் மற்றும் கப்பல்களை வரிசைப்படுத்துதல் உள்ளிட்ட அமெரிக்க அரசின் திட்டங்களையும் அறிவித்தார்.

கியூபாவை சுற்றி வளைத்து இராணுவத்தை அப்புறப்படுத்தவும் திட்டங்களை வெளியிட்டார். கியூபாவை சுற்றி வளைப்பதன் மூலம் இராணுவத்தளத்தின் கட்டுமானத்தை தடுத்து நிறுத்துவது அவரது நோக்கம்.

இதற்கு ஏற்றவாறு அமெரிக்க கப்பல்கள் கடலில் நிறுத்தப்பட்டன. துளியும் அஞ்சாத சோவியத் இராணுவமும் அமெரிக்க கப்பல்காளை எதிர்த்து அணிவகுத்தது.

ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பலை தளபதி வாலண்டைன் சாவிட்ஸ்கி செலுத்தினார். குளிர்ந்த நீர் இருக்கும் ஆர்டிக் கடலில் செலுத்த வடிவமைக்கப்பட்ட அந்த கப்பலால் கரீபிய நீரின் வெப்பத்தை தாக்குபிடிக்கமுடியவில்லை.

ரஷ்ய நீர்மூழ்கி
ரஷ்ய நீர்மூழ்கி

கப்பலினுள் குளிர்விப்பான்கள் சரியாக செயல்படமுடியவில்லை. பற்றாதகுறைக்கு அமெரிக்க இராணுவமும் இந்த நீர்மூழ்கியின் இருப்பைக் கண்டறிந்தது. இதனால் மற்ற கப்பல்களை விட வேகமாக இந்த கப்பலை இயக்கினார். இது மேலும் வெப்பம் உயர வழி வகுத்தது.

ரஷ்ய நீர்மூழ்கி கப்பலை மேல்பரப்புக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்க இராணுவம் குண்டுகளை வீசத் தொடங்கியது. வெடிகுண்டுகள் ரஷ்ய இராணுவத்தை பதட்டமடையச் செய்தது. போர் தொடங்கிவிட்டதாக அவர்கள் நினைத்திருக்கக் கூடும் என பெண்டகனின் செய்தி வெளியீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தளபதி சாவிட்ஸ்கி அணுகுண்டு வீசுவது என முடிவு செய்தார். "நாம் உயிரிழந்தாலும் பரவாயில்லை. ரஷ்ய கடற்படைக்கு அவமானமாக இருந்துவிடக் கூடாது" என முழங்கினார்.

ரஷ்ய விதிமுறைகளின் படி அணுகுண்டு வீச அரசிடம் இருந்து நேரடியான அனுமதி எல்லாம் தேவையில்லை. மூன்று தளபதிகளும் ஒத்துக்கொண்டாலே போதும்.

இரண்டு தளபதிகள் அந்த இக்கட்டான சூழலில் அணு ஆயுதத்தை தேர்வு செய்தபோதிலும் ஆர்க்கிபோவ் அனுமதிக்க மறுத்துவிட்டார்.

கியூபாவை சுற்றி வளைத்த அமெரிக்க படைகள்
கியூபாவை சுற்றி வளைத்த அமெரிக்க படைகள்

ஆர்க்கிபோவ் ரஷ்ய இராணுவத்தில் மிகவும் மதிக்கப்பட்ட இளம் அதிகாரியாக இருந்தார். 1961ம் ஆண்டு ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் ஓவர்லோட் செய்யப்பட்ட அதிக வெப்பமான அணு உலையைக் காப்பாற்றுவதற்காக, தன் மீதான கதிர்வீச்சைக் கண்டு அஞ்சாமல் செயல்பட்டார். இதனால் இராணுவத்தில் அவர்மீது மதிப்பு இருந்தது.

ஆர்க்கிபோவ் பதற்றமான சூழலில் கேப்டனை சமாதானம் செய்தார். இராணுவத் தளத்தை கைவிட்டு அணு ஆயுதப் போரில் இருந்து உலகையே காப்பாற்றினார்.

வெசிலி ஆர்க்கிபோவ்: 'ஓப்பன்ஹெர்மரை' தெரியும், அணுஆயுத போரை தடுத்துநிறுத்திய இவரை தெரியுமா?
அமெரிக்கா - ரஷ்யா அணு ஆயுத போர் நடந்தால் எத்தனை பேர் உயிரிழப்பர்? : அதிர வைக்கும் தகவல்

அன்று ஆர்க்கிபோவ் ஒப்புதல் அளித்திருந்தால், ஹிரோஷிமா, நாகசாகி வரிசையில் உலகம் மற்றொரு அணு ஆயுத பேரழிவைக் கண்டிருக்கும். அமெரிக்க பதிலடி கொடுத்து உலகப் போராக வெடித்திருந்தால் நடந்திருக்கும் நாசங்களை கற்பனை செய்வதே கடினம்.

அக்டோபர் 28 அதிகாலையில், துருக்கியிலிருந்த அமெரிக்க அணுசக்தி தளத்தை அகற்றுவதற்கும், அதற்கு பதிலாக, கியூபாவில் இருந்த சோவியத் தளத்தை அகற்றுவதற்கு இரு நாடுகளும் ஒரு உடன்பாடு செய்துகொண்டனர்.

வெசிலி ஆர்க்கிபோவ்: 'ஓப்பன்ஹெர்மரை' தெரியும், அணுஆயுத போரை தடுத்துநிறுத்திய இவரை தெரியுமா?
உலகின் முதல் அணுகுண்டு வெடிப்பில் கிடைத்த ஒளிரும் கண்ணாடிகள் - கேட்ஜெட் சோதனை தெரியுமா?

சிறிது காலம் கழித்து தனது இராணுவ வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஆர்க்கிபோவ், 1998 இல் தனது 72வது வயதில் தனக்கான எந்த அங்கீகாரத்தையும் பெறாமல் உயிரிழந்தார்.

உண்மையில் உலகை பெரிய அழிவில் இருந்து காத்த அந்த நாயகனுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அணு ஆயுதப்போரை விரும்பாத ஒவ்வொருவரும் நன்றி தெரிவிக்க வேண்டிய மனிதன் ஒருவர் இருக்கிறார் என்றால் அது ஆர்க்கிபோவ் தான்.

வெசிலி ஆர்க்கிபோவ்: 'ஓப்பன்ஹெர்மரை' தெரியும், அணுஆயுத போரை தடுத்துநிறுத்திய இவரை தெரியுமா?
Oppenheimer: ஹீரோவா? வில்லனா? - விகடனின் சிறப்புக் கட்டுரை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com