Bomb Cyclone : கடுங்குளிர், காருக்குள்ளேயே இறந்த மக்கள் - என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

நியூயார்க் மாகாணத்தின் ஆளுநரான கேத்தி ஹாசல் (Kathy Hochul) பஃபல்லோ நகரத்தை சேர்ந்தவர். இந்தப் பனிப்புயல் இந்த நூற்றாண்டிலேயே காணப்படாத மிக மோசமான புயல் என வருணித்திருக்கிறார்
Bomb Cyclone
Bomb CycloneYoutube
Published on

கடந்த சில தினங்களாக அமெரிக்காவில் ஏற்பட்ட மிகக் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவுப் புயல் காரணமாக சுமார் 56 பேர் இறந்திருப்பதாக பிபிசி வலைதள கட்டுரை ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

28 பேர் நியூயார்க் நகரத்தின் மேற்கு பகுதியில், குறிப்பாக பஃபல்லோ (Buffalo) நகரத்தில் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

சாலையில் மிகக் கடுமையான பணிப் பொழிவு ஏற்பட்டதால் தங்களுடைய வீடுகள் அல்லது அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு பயணிக்க முடியாமல் சிலர் காரிலேயே இரண்டு நாட்களுக்கு மேல் சிக்கித் தவித்து இருக்கிறார்கள் என அந்த மாகாண அரசு தரப்பிலிருந்து ஊடகங்களிடம் கூறியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நியூயார்க் மாகாணத்திற்கு அவசரகால உதவிகளை அறிவித்திருக்கிறார். நியூ ஜெர்சி மாகாணம் தன்னால் இயன்றவரை பல அவசர உதவிகளை நியூ யார்க் மாகாணத்திற்கு செய்து கொடுத்திருக்கிறது.

நியூயார்க் மாகாணத்தின் ஆளுநரான கேத்தி ஹாசல் (Kathy Hochul) பஃபல்லோ நகரத்தை சேர்ந்தவர். இந்தப் பனிப்புயல் இந்த நூற்றாண்டிலேயே காணப்படாத மிக மோசமான புயல் என வருணித்திருக்கிறார்.

நகரத்திற்கு செல்வது ஏதோ போர்க்களத்திற்கு செல்வது போல் இருந்தது. சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததைப் பார்க்கவே அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தது என கேத்தி கூறியுள்ளார்.

பல்வேறு அவசர உதவி வாகனங்கள் கூட, கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் அவர்களுக்கு உதவி வழங்கவும் அவர்களை சென்றடைய முடியாமல், பனிப் பொழிவாலும் புயலினாலும் சாலையில் பயணிக்க முடியாமல் சிக்கித் தவித்ததாக குறிப்பிட்டிருக்கிறார் கேத்தி.

நியூயார்க் மாகாணத்தை சேர்ந்த அவசர உதவிப் பணியாளர்கள் சாலை ஓரங்களில் இருக்கும் ஒவ்வொரு காரையும்ம் பரிசோதித்து யாரேனும் உயிரோடு இருக்கிறார்களா என தேடியுள்ளனர். அப்படி தேடிய போது, பலரும் குளிரை தாங்க முடியாமல் இறந்து சடலங்கலாக மீட்கப்பட்டுள்ளனர்.

இப்படி காரிலேயே சிக்கி உயிரிழந்தவர்கள் ஒரு பக்கம் என்றால், வேறு சிலர் பணியை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். எனவே தற்போது பஃபல்லோ நகர நிர்வாகமே பனியை அகற்றும் வேலையில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ளது.

உள்ளூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், (இரண்டு முதல் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் இதில் அடக்கம்) பனிப்பொழிவில் சிக்கினர். கிட்டத்தட்ட 11 மணி நேரம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தங்களை மீட்க யாரேனும் வருவார்கள் என காத்திருந்திருக்கிறார்கள்.

Bomb Cyclone
கடல், மணல், பனி: மூன்றும் ஒரே இடத்தில்! இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படம் - எங்கே?
Bomb Cyclone
எட்டி : இமயமலை பனி மனிதன் இருப்பது உண்மையா? - மர்ம உயிர் பற்றி ஆய்வாளர்கள் சொல்வதென்ன?
Bomb Cyclone
பாபா வாங்கா : ஏலியன் முதல் சூரிய புயல் வரை - 2023ல் நம்மை சூழவிருக்கும் ஆபத்துகள் என்ன?

காரில் சிக்கிய குடும்பம், கார் இன்ஜினைப் பயன்படுத்தி, கூடுமானவரை வெப்பமூட்டிக் கொண்டு உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். குழந்தைகள் பயந்துவிடக்கூடாது என்றும், தாங்களும் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்றும் குழந்தைகளோடு விளையாடி பொழுதைக் கழித்திருக்கிறார்கள். 11 மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு, அவர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

தன்னுடைய இரண்டு குழந்தைகளோடு கனடா நாட்டில் உள்ள, ஒண்டாரியோ மாகாணத்தில் ஹாமில்டன் நகரத்தில் உள்ள உறவினர்களை சந்திக்க சென்ற ஒருவர் பஃபல்லோ நகரத்தில் பனிப்புயல் பிரச்சனையில் சிக்கிக் கொண்டார்.

முதலில் ஒரு சில மணி நேரங்களுக்கு தன் கார் இன்ஜினின் சக்தியைப் பயன்படுத்தி வெப்பமூட்டி வாழ்ந்து வந்தவர், இப்படிக் காரிலேயே இருந்தால் குழந்தையோடு இறக்க வேண்டியது தான் என முடிவு செய்து, அருகில் ஏதேனும் தங்குவதற்கு இடம் இருக்கிறதா என காரை விட்டு வெளியேறி தேடி உள்ளார்.

அவருடைய 6 வயது குழந்தை டெஸ்டினியை தன் முதுகில் சுமந்த படியும், அவருடைய 16 வயது குழந்தை சிண்டி அவரது நாய்க்குட்டியோடு அவரை பின்தொடர்ந்தும் சென்று ஒரு பாதுகாப்பான இடத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பனிப் புயலில் சிக்கித் தவித்த அவருக்கும், அவரது மகள்களுக்கும் ஒரு குடும்பம் உதவ முன்வந்து, தங்கள் வீட்டுக் கதவுகளை திறந்தனர். அப்போது அவர்களைப் பார்த்து கண்ணீர் விட்டதாகவும் இதை தன் வாழ்க்கையில் மறக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார் அவர்.

ஒரு பக்கம் இப்படி மனிதம் செழித்தொங்கும் போது, மறுபக்கம் இதே இயற்கை பேரிடர்களைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கிழக்கு பஃபெல்லோ நகரத்தில் ஒரு சிறிய எலக்ட்ரானிக்ஸ் கடையை ஆக்கிரமித்து பொம்மைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், ஸ்பீக்கர்கள்... என சுமார் 50,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். தன் கடையில் நடைபெறும் கொள்ளையை குறித்து காவல்துறையிடம் புகார் அளித்த போது பனிப்புயலில் சிக்கி இருப்பவர்களை மீட்க தாங்கள் சென்று கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.

Bomb Cyclone
மான்சா மூசா : பில்கேட்ஸ், அமேசான் ஜெஃப் பெசாஸைவிட உலகின் மிகப்பெரிய பணக்கார தங்க அரசன் கதை
Bomb Cyclone
ஓமன் : ஓர் அரபு நாட்டின் அசுர வளர்ச்சி - வியக்க வைக்கும் சுவாரஸ்ய வரலாறு

பாம் சைக்ளோன் (Bomb Cyclone)

பொதுவாக 24 மணி நேரத்துக்குள் 24 மில்லி பார் அல்லது அதற்கும மேல் வளிமண்டலத்தில் காற்றின் அழுத்தம் குறைந்தால் அது ஒரு பாம் சைக்கிலோனாக உருவாகும். அப்படி தற்போது அமெரிக்காவில் உருவாகி இருக்கும் பாம் சைக்லோன் கிட்டத்தட்ட ஒரு தலைமுறை காணாத மிகக் கடுமையான புயல் என்கிற பி பி சி வலைத்தளம்.

இந்தப் புயல் காரணமாக கிட்டத்தட்ட அமெரிக்காவில் 4,000 விமானங்கள் கடந்து திங்கட்கிழமை ரத்து செய்யப்பட்டன. அடுத்த சில நாட்களுக்குள் இந்த மோசமான வானிலை பழைய நிலைக்கு திரும்பும் என்றும் அதுவரை பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கடுமையான பிரச்சினையினால் சுமார் 2.5 லட்சம் வீடுகள் மற்றும் வணிகங்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக மதிக்கப்பட்டிருக்கிறது. கூடுமானவரை மின்சார விநியோகம் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இந்த கடுமையான வானிலை பிரச்சனை வெர்மான்ட், ஓஹியோ, மிசோரி, விஸ்கான்சின், கொலராடோ, தெற்கு ஃப்ளோரிடா... உள்ளிட்ட பல பகுதிகளல் மரணங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. மேற்கு அமெரிக்காவில் இருக்கும் மொண்டானாவில் (Montana) அதிகபட்சமாக குளிர் மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் வரை தொட்டிருப்பதாகவும் பிபிசி வலைத்தளத்துறைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Bomb Cyclone
வட கொரியா: கிம் ஜாங் உன் வம்சத்தின் விறுவிறுப்பான கதை | பகுதி 1
Bomb Cyclone
கிம் கர்தாஷியன் விவாகரத்து: மாதம் ரூ.1.6 கோடி இழப்பீடு கொடுக்கும் முன்னாள் கணவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlus

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com