மனைவியை தூக்கிக்கொண்டு ஓடும் கடுமையானபோட்டி - விநோத பந்தயம் எங்கு நடக்கிறது?
மனைவியை தூக்கிக்கொண்டு ஓடும் கடுமையானபோட்டி - விநோத பந்தயம் எங்கு நடக்கிறது?Twitter

மனைவியை தூக்கிக்கொண்டு ஓடும் கடுமையான போட்டி - விநோத பந்தயம் எங்கு நடக்கிறது?

254 மீட்டர் நீளமான இந்த ஓடுதளத்தில் தம்பதிகள் தண்ணீர், மணல், குழிகள், என பல தடைகளைக் கடந்து ஓட வேண்டும். பங்கேற்பாளர்களில் பெண்ணின் எடை 49 கிலோகிராமுக்கு அதிகமாக இருந்தால் தான் அனுமதிப்பார்கள்

ஃபின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடு என்று அறியப்படுகிறது. இந்த மகிழ்ச்சியான மனிதர்கள் ஒரு விநோதமான போட்டியை ஏற்பாடு செய்கின்றனர். அதுதான் மனைவியை தூக்கிச்செல்லும் போட்டி.

குரங்கு பஃபே திருவிழா, போரியோங் மண் திருவிழா, சர்வதேச முடி உறைதல் போட்டி, சீஸ் ரோலிங் என பல விசித்திரங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் அவற்றுக்கு கொஞ்சம் சளைத்ததில்லை இந்த மனைவியைத் தூக்கிச்செல்லும் போட்டி.

ஃபின்லாந்தில் உள்ள சோங்கஜார்வி (Sonkajarvi) என்ற இடத்தில் ஆண்டுதோறும் இந்த போட்டி திருவிழா போல நடைபெறுகிறது. 1992ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விழா பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்பதனால் இந்த போட்டி சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.

இந்த போட்டியை பார்ப்பது விநோதமாகவும் நகைச்சுவையாக இருக்கும். போட்டியாளர்கள் தங்கள் மனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடுபாதையில் இருக்கும் தடைகளைக் கடந்து ஓட வேண்டும். இது போட்டியாளர்களுக்கு உண்மையாகவே கடுமையானதாக இருக்கும்.

 Taisto Miettinen and Katja Kovanen
Taisto Miettinen and Katja Kovanen

கரடுமுரடான பாதைகள், நீரோடைகள், பாறைகளைக் கடந்து ஓட வேண்டும். ஆரம்பத்தில் மிகக் கடுமையாக இருந்த இப்போட்டியை சமீபத்தில் போட்டியாளர்கள் நலன்கருதி எளிமையாக்கியிருக்கின்றனர். என்றாலும் மணல், குழிகள், தண்ணீரைக் கடந்துதான் போட்டியாளர்கள் ஓட வேண்டும்.

மனைவியை தூக்கிக்கொண்டு ஓடும் கடுமையானபோட்டி - விநோத பந்தயம் எங்கு நடக்கிறது?
102 குழந்தைகள், 12 மனைவிகள் - இனிமே முடியாது என கும்பிடு போடும் நபர் - எங்கே?

254 மீட்டர் நீளமான இந்த ஓடுதளத்தில் தம்பதிகள் தடைகளைக் கடந்து ஓட வேண்டும். பங்கேற்பாளர்களில் பெண்ணின் எடை 49 கிலோகிராமுக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

இதில் வெற்றிபெறுபவர்களுக்கு மட்டுமல்லாமல் சிறந்த பொழுதுபோக்கு ஜோடி, சிறந்த ஆடை மற்றும் வலுவான கேரியர் உடைய ஜோடி என பல பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்படும்.

மனைவியை தூக்கிக்கொண்டு ஓடும் கடுமையானபோட்டி - விநோத பந்தயம் எங்கு நடக்கிறது?
கணவர் உயிருடன் இருக்கும்போதே 'கைம்பெண் உதவித்தொகை' வாங்கிய பெண்கள் - சிக்கியது எப்படி?

இந்த போட்டியைப் போன்றே பரிசுகளும் விநோதமாகவே இருக்கும். வெற்றிபெறும் தம்பதிக்கு பெண்ணின் உடல் எடைக்கு சமமான எடையில் பியர் வழங்கப்படும்.

இப்போது Taisto Miettinen and Katja Kovanen என்ற ஃபின்லாந்து ஜோடி சாம்பியன்களாக உள்ளனர். நீங்களும் ஒரு தம்பதியாக இருந்தால் இந்த போட்டியில் கலந்துகொள்வீர்களா?

மனைவியை தூக்கிக்கொண்டு ஓடும் கடுமையானபோட்டி - விநோத பந்தயம் எங்கு நடக்கிறது?
இரண்டாவது திருமணமா? அடுத்தவர் மனைவி தான் மணப்பெண்- வினோத வழக்கம் பின்பற்றும் பழங்குடியினர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com