Pet Rock : கல்லை விளம்பரப்படுத்தி கோடிகளை சம்பாதித்த வித்தகர் - கேரி டல்லின் ஆச்சரிய கதை! Twitter
பிசினஸ்

Pet Rock : கல்லை விளம்பரப்படுத்தி கோடிகளை சம்பாதித்த வித்தகர் - கேரி டல்லின் ஆச்சரிய கதை!

Antony Ajay R

பெட் ராக் என்பது ஒரு விளையாட்டு பொம்மை அல்லது ஒரு வளர்ப்பு ஜீவன் எனக் கருதலாம்.

ஆனால் உண்மையில் சாதாரணமாக மெக்சிகன் கடற்கரைகளில் எடுக்கப்பட்ட கற்கள் தான் அவை.

வெறும் கற்களை விற்று பல கோடிகளை சம்பாதித்துள்ளார் இதனைக் கண்டுபிடித்த கேரி டல்.

வெறும் கற்களை விற்று மில்லியனரானாரா? என நீங்கள் வியக்கலாம். அவர் விற்றது கற்களை அல்ல, அட்டைப் பெட்டிகளை. விளம்பர உலகின் இந்த வினோத கதையை புரியும் படி தெளிவாக சொல்கிறேன்.

ஒரு ஐடியா!

1975ல் அமெரிக்கா விளம்பர மோகத்தின் உச்சியில் இருந்தது என்றே சொல்லலாம். நல்ல பொருட்களைத் தயாரிப்பவர்களை விட நல்ல விளம்பர வசனங்களை எழுதுபவர்கள் லாபம் பெறுவது உறுதி எனக் கூறலாம்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த கேரி டல் ஒரு விளம்பர எழுத்தாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு அதிகமாக கடன்களும் இருந்தது.

டல் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு நாள் பாரில் குடித்துக்கொண்டிருக்கும் போது வீட்டு விலங்குகளின் அராஜகம் பற்றி பேசியிருக்கின்றனர்.

நாய்களும் பூனைகளும் அட்டகாசம் செய்வதாக ஒரு நண்பர் புலம்பியிருக்கிறார். அவரிடம், "ஒரு கல்லை தான் வளர்ப்பு பிராணியாக வைத்துக்கொள்ளுங்களேன்" என நகைச்சுவையாக கூறியிருக்கிறார் டல்.

அப்போது அதனை நகைச்சுவையாக கருதியிருந்தாலும் டல் மனதுக்கு அது ஒரு சிறந்த ஐடியாவாக தோன்றியிருக்கிறது.

பெட் ராக் என்ற ஐடியாவை பிடித்துக்கொண்டு ஒரு கல்லை வளர்ப்பு பிராணியாக நினைத்து உரிமையாளர் கையேடு ஒன்றை எழுதினார் டல்.

பெட் ராக் ஒரு போதும் இறந்து போகாத துணைவனாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். அதனிடம் எப்படியெல்லாம் நடந்துகொள்ளன் வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

30 பக்க கையேடு இருந்தால் மட்டும் கல் செல்லபிராணி ஆகிவிட முடியுமா? டல் மற்றொரு யுத்தியை மேற்கொண்டார்.

ஒரு அட்டைப் பெட்டியை எடுத்துக்கொண்டுஅதில் சுவாசிக்க போடப்படுவது போல துளைகளைப் போட்டார். கொஞ்சமாக மிருதுவான காய்ந்த புற்களை பறவையின் கூடு போல உருவாக்கி அதில் ஒரு கல்லை வைத்தார்.

பெட் ராக் பெட்டி ரெடி! இதன் விலை 3.5 டாலர்கள். புகழ்பெற்ற பரிசு கண்காட்சிகளில் இந்த பெட் ராக் பெட்டிகளை வைத்தார்.

முதலீடுகளும் லாபமும்

இந்த அபத்தமான பொருளை விற்பனை செய்யும் டல்லின் ஐடியாவை அவருடன் பணியாற்றிய ஜார்ஜ் கோக்லி மற்றும் ஜான் ஹெகெர்டி ஆகியோர் முதலீடு செய்தனர்.

இதனால் பணரீதியாக நிலையான இடத்துக்கு வந்தார் கேரி டல்.

பெட் ராக் ஐடியா மக்களுக்கு மிகவும் பிடித்ததாக ஆனது. நகைச்சுவையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கேரி டல்லுக்கு ஆர்டர்கள் வரத் தொடங்கின. நியூஸ்வீக் பத்திரிகை கேரி டல் குறித்தும் பெட் ராக் குறித்தும் கட்டுரை வெளியிட்டது.

gary duhl

முட்டாள் தனமாக இருந்தாலும் மீடியாக்களின் வெளிச்சம் பட்ட பிறகு பெட் ராக் அடுத்த தளத்துக்கு நகர்ந்தது. பலரும் பெட் ராக்கை வாங்கி தங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசாக வழங்கினர்.

கிஃப்ட் என்றாலே கடிகாரம் வாங்கும் பழக்கம் போல பலரும் பெட் ராக் வாங்கி கொடுத்துள்ளனர். நிறுவனத்துக்கும் அதிக லாபம் கிடைத்தது. வெறும் 10,000 டாலர் முதலீடு செய்தவருக்கு 2 லட்சம் டாலர் திரும்ப கிடைத்தது.

ஒரே ஆண்டில் கேரி டல் 10 லட்சம் டாலர்கள் சம்பாதித்திருந்தார்.

தடைகளும் தோல்விகளும்

விற்கப்படும் ஒவ்வொரு பெட் ராக் தரும் லாபத்திலும் 95% கேரி டல்லுக்கு கிடைத்தது. இதனால் அவர் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆனார்.

ஆனால் நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு போதுமான லாபம் கிடைக்கவில்லை. இதனால் கேரி டல் மீது வழக்கு தொடுத்தனர்.

முதலீட்டாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. கேரி டல் அவர்களுக்கு பெரும்பணம் கொடுத்தார். இருந்தும் அது நிறுவனத்தை பெரிய அளவில் பாதிக்கவில்லை.

புதிய வழிகளைப் பயன்படுத்தி பெட் ராக் சந்தையை விரிவுபடுத்த முயன்றார் கேரி டல்.

கல்லின் மேலே அமெரிக்க கொடி வரைந்து புதிய டிசைனாக அறிமுகப்படுத்தினார். பெட் ராக் டி-சர்ட்கள், பெட் ராக் ஷாம்பு என பெட் ராக்கை பிராண்டாக பயன்படுத்தி பல பொருட்களை விற்பனைக்கு கொண்டுவந்தார்.

எல்லாம் சரியாக செய்தவர் கல்லுக்கு காப்புரிமை பெறத் தவறினார். இதனால் பல பெட் ராக் நிறுவனங்கள் தோன்றின.

அடுத்தடுத்து டல் முயற்சித்த இரண்டு ஐடியாக்கள் தோல்வியை சந்தித்தன. டல் வேறு தொழிலுக்கு மாறிச் சென்றுவிட்டார்.

பெட் ராக் போல பலர் பல வினோதமான கிஃப்ட்களை உருவாக்க முயற்சித்தனர். எதுவும் சரிவரவில்லை. பெட் ராக் ஒரு தனித்துவமான பொருளாக நின்றது.

8 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் விளம்பரத் தொழிலில் ஈடுபட்டார் கேரி டல். கடந்த 2015ம் ஆண்டு அவர் மரணித்தார். இப்போதும் பல பெட் ராக்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?