அதானி vs ஹிண்டன்பெர்க் : அமெரிக்க நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளுக்கு அதானி பதில்! Twitter
பிசினஸ்

அதானி vs ஹிண்டன்பெர்க் : அமெரிக்க நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளுக்கு அதானி பதில் என்ன?

இந்த அறிக்கைக்கு பரிகாரமாகவும் தண்டனை அளிக்கும் விதமாகவும் ஹிண்டன்பெர்க் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

Antony Ajay R

உலகின் 3வது பெரிய பணக்காரரான அதானி நிறுவனத்துக்கு எதிராக, கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்பான முறைகேடுகளை தடயவியல் ரீதியில் ஆராய்ந்து பொதுவெளிக்கு கொண்டு வரும் ஹிண்டன்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளித்து உள்ளது அதானி குழுமம்.

ஹிண்டன்பெர்க் ஒரு அமெரிக்க நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகளின் விலை சீட்டுகட்டு போல சரிந்து அவரது சொத்துமதிப்பை பாதித்துள்ளது.

இந்த அறிக்கைக்கு பின்னர் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்திருக்கிறது.

அதானி நிறுவன பங்குகளை கையாளுவதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், கணக்கு வழக்கில் மோசடிகள் இருப்பதாகவும் ஹிண்டன்பெர்க் நிறுவன அறிக்கை கூறுகிறது.

அதானி குழுமம் கடனில் இருப்பதாகவும் மொரீஷியஸ் மற்றும் கரீபிய நாடுகளில் உள்ள போலியான நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் நிதிநிலை சரியாக இருப்பதாக காட்டிக்கொள்வதாகவும் அறிக்கை கூறுகிறது. ஹிண்டன் பெர்க் நிறுவன அறிக்கையை சுருக்கமாக தெரிந்துகொள்ள...

அதானி குழுமம் மோசடி செய்கிறதா? : ஹிண்டன்பெர்க் வைக்கும் குற்றச்சாட்டுகள் இவைதான் Explained

ஹிண்டன் பெர்க் அறிக்கையை தீங்கிழைக்கும் நோக்கில் உருவான 'தேர்ந்தெடுக்கப்பட்ட தவறான தகவல்கள்' என அதானி குழுமம் கூறியுள்ளது.

இந்த அறிக்கைக்கு பரிகாரமாகவும் தண்டனை அளிக்கும் விதமாகவும் ஹிண்டன்பெர்க் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

தாங்கள் எல்லா சட்டங்களையும் பின்பற்றுவதாக கூறும் அதானியின் சட்டக் குழுவின் தலைவர் ஜதின் ஜலுந்த்வாலா, "இந்த அறிக்கை இந்திய பங்கு சந்தையில் ஏற்ற இறக்கத்தை உருவாக்குவதன் மூலம் தேவையற்ற மனஉளைச்சலை இந்திய மக்களுக்கு வழங்குகிறது" எனக் கூறியுள்ளார்.

அதானி குழுமம் கண்டனங்கள் தெரிவித்தாலும் ஹிண்டன்பெர்க் நிறுவனம் அதன் அறிக்கையில் இருந்து பின்வாங்குவதாக இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறது.

ஏற்கெனவே கடந்த 2 ஆண்டுகளில் அதானி குழுமத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர் அதானி இடையேயான நல்லுறவு அவரின் வளர்ச்சியில் கணிசமாக பங்காற்றியிருக்கும் எனவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலை அதானி - ஹிண்டன்பெர்க் விவகாரம் சட்டப்பூர்வமாக அணுகப்பட்டால் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?