Elon Musk Twitter
பிசினஸ்

Elon Musk : வாடகை செலுத்த, வீட்டை நைட் கிளப்பாக்கிய மஸ்க் - இது எப்ப?

NewsSense Editorial Team

உலகின் நம்பர் ஒன் பணக்காரர், வெற்றிகரமான டெஸ்லா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி, தொழில்நுட்ப வல்லுனர், தொலைநோக்கு சிந்தனைவாதி, விஞ்ஞானி... என எலான் மஸ்கை பலரும் பல்வேறு விதத்தில் அழைக்கின்றனர்.

சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க, சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் எலான் மஸ்க் ஒரு திட்டத்தை ட்விட்டர் பங்குதாரர்களிடம் சமர்ப்பித்தார். அத்திட்டத்தைக் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ட்விட்டர் இயக்குநர்கள் குழு ஏற்றுக் கொண்டது. வெகு விரைவில் ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்குக்கு சொந்தமாக இருக்கிறது.

இதற்கிடையில் மெட் கலா என்கிற உலகின் உச்சபட்ச பிரபலங்கள் பங்கெடுக்கும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதற்காக எலான் மஸ்க் கிட்டத்தட்ட அனைத்து பத்திரிக்கைகளும் தலைப்புச்செய்தி ஆனார்.

மறுபக்கம் தன்னுடைய இளமைக் காலத்தில் தான் குடியிருந்த வீட்டை ஒரு நைட் கிளப்பாக மாற்றி காசு பார்த்த கதையை ட்விட்டர் தளத்தில் அவரே பதிவிட்டுள்ளார்.

Elon Musk - 1995

எலான் மஸ்க் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்ததால் தான் இத்தனை பிரமாதமான வெற்றிகளை ஈட்டி இருக்கிறார் என்றால், பணக்காரக் குழந்தைகள் எந்த பணிக்கும் செல்லாமல் கலை சார்ந்த பள்ளிகளுக்குச் செல்வது போன்ற செயல்களில் தங்கள் வாழ்கையை வீணடிப்பது ஏன்? என எனக்கு விளக்குங்களென்கிற தொனியில் ட்விட்டர் தளத்தில் ஒரு பயனர் எலான் மஸ்கை டேக் செய்தி பதிவிட்டு இருந்தார்.

ஆம், பொதுவாக அதிகப் பணத்தோடு தங்கள் வாழ்க்கையைத் தொடங்கும் குழந்தைகள், எதுவுமே இல்லாமல் வளரும் குழந்தைகளை விட குறைவாகவே உற்சாகம் கொண்டிருப்பார்கள்.

நாங்கள் 1995ம் ஆண்டு சிப் 2 (Zip2) நிறுவனத்தைத் தொடங்கிய போது, எனக்கு சுமார் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் மாணவர் கடனும், நானே கட்டமைத்த ஒரு கணினியும், ஒரு சில ஆயிரம் டாலர் பணம் மட்டுமே கையிலிருந்தது என எலான் மாஸ்க் அந்தப் பயனருக்குப் பதிலளித்திருந்தார்.

நீங்கள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது, வீட்டு வாடகையைச் சமாளிக்க, உங்கள் அறையை நைட் கிளப்பாக மாற்றினீர்களாமே? என மற்றொரு ட்விட்டர் பயனர் எலான் மஸ்கிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆம் எங்கள் வீட்டை இரவு கிளப்பாக மாற்றி ஐந்து டாலர் எனக் கட்டணம் வசூலித்து வீட்டு வாடகையைச் செலுத்தினோம் என எலான் மஸ்க் அந்த பயனருக்கும் பதிலளித்திருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?