கேப்ரில்லா : "கடற்பாசிகள் தான் வருங்கால உணவு" - கோவா பெண்ணின் புதிய ஐடியா! Twitter
பிசினஸ்

கேப்ரில்லா : "கடற்பாசிகள் தான் வருங்கால உணவு" - கோவா பெண்ணின் புதிய ஐடியா!

Antony Ajay R

கடற்பாசிகளில் மனிதர்கள் சாப்பிடக்கூடியவையும் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால் எப்போதாவது அதனை சுவைத்துப் பார்க்க முயன்றிருக்கிறோமா?

வெளிநாடுகளில் கடற்பாசி சாப்பிடும் பழக்கம் பரவலாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அப்படியல்ல.

இந்த வழக்கத்தை மாற்ற நினைக்கிறார் கேப்ரில்லா கி'க்ரூஸ். கடற்பாசி உள்ளிட்ட கடலடி தாவரங்களை நம் உணவு மேசைக்கு எடுத்துவர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

யார் இந்த கேப்ரில்லா?

கடல்வளங்களைப் பாதுகாப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார் கோவாவைச் சேர்ந்த கேப்ரில்லா.

இதற்காக 'குட் ஓசன்' என்ற பாசிகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பை உருவாக்கியுள்ளார்.

"கடல் சூழலியல் அமைப்பு, பவளப்பாறைகள் மற்றும் டால்பின்கள் உள்ளிட்ட உயிரினங்களை பாதுகாப்பதில் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளேன். " என ஊடங்களுக்கு அளித்த பேட்டியில் தன்னைப் பற்றி குறிப்பிடுகிறார்.

"5 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கடலுக்குள் சென்று பாசிகளை சேகரிக்கும் பெண்கள் குறித்து தெரிந்துகொண்டேன்.

தலைமுறைகளாக கடற்பாசிகளை அவர்கள் ஹைட்ரோகொலோய்டு தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதுதான் நான் கடலில் இறங்க உந்துசக்தியாக இருந்தது" எனக் கூறியுள்ளார் அவர்.

கேப்ரில்லா ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை படித்துள்ளார். பின்னர் இந்தியாவில் உள்ள கடற்பாசிகள் மற்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்.

ஜப்பானிய உணவகங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டது தனக்கு சாதகமாக அமைந்தது என்கிறார் கேப்ரில்லா.

"ஜப்பானிய உணவகங்கள் மெனுவில் கடல்பாசியை குறிப்பிட்டன. சிறிய சந்தைதான் என்றாலும் விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியது." என ஊடகங்களில் கூறியுள்ளார்.

ஏன் கடல்பாசிகள் முக்கியம்?

காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் உலகம் முழுவதுக்கும் உணவளிப்பதில் இருக்கும் சிக்கலை நாம் அறிவோம். இதற்கு ஒரு தீர்வாக சூப்பர் ஃபுட்டாக கடற்பாசிகள் இருக்கும் என்கிறார் கேப்ரில்லா.

கடற்பாசிகலில் அயோடின் மற்றும் வைட்டமின் கே, பி வைட்டமின்கள், துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற பிற சத்துகள் மற்றும் தாதுக்களும் ஆன்டிஆக்ஸிடன்ட்களுடன் இருக்கின்றன.

இதனால் சத்துமிகுந்த டயட் உணவாக கடற்பாசி இருக்கும் என்கின்றனர். இது செல்கள் பாதிப்படைவதில் இருந்து காக்கும்.

பழுப்பு கடல்பாசி உலர்ந்த பின்னர் அதில் சாலட் அல்லது சூப் செய்ய முடியும்.

ஊறுகாய், தின்பண்டங்கள், பர்கர்கள், காய்கறிகள், சுவையூட்டும் மற்றும் உப்புக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.

கடற்பாசியை உபயோகப்படுத்துவது நமக்கு புதிதான விஷயமில்லை. ஏற்கெனவே பல்துலக்கும் பேஸ்ட், அகர் அகர் மற்றும் ஐஸ் கிரீம்களில் கடற்பாசிகள் சேர்க்கப்படுகின்றன.

கடற்பாசிகள் தான் வருங்கால உணவு

கோவாவின் கடற்கரைகளில் மட்டுமே 145 ஆவணப்படுத்தப்பட்ட வகைகளில் கடற்பாசிகள் உள்ளன.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் வளரும். எனவே ஆண்டு முழுவதும் பாசிகள் வளரும் என்பது உறுதி.

கடற்பாசிகளைப் பயன்படுத்தத் தொடங்கும் போது அதனை அதிக்மாக சுரண்டாமல் இருக்க வேண்டியதும் முக்கியம் என்கிறார் கேப்ரில்லா.

"ஒரு இடத்தில் இருக்கும் கடற்பாசிகள் குறித்து தெரிந்துகொண்டு சரியான திட்டங்களை வகுத்த பின்னரே அவற்றை அறுவடை செய்ய வேண்டும்." எனக் கூறியிருக்கிறார்.

மண் இல்லாமல் வளரும் உணவு என்பதால் வருங்காலத்தில் அதிகப்படியாக உண்ணப்படும் உணவாக கடல்பாசிகள் இருக்கும் என்கிறார் கேப்ரில்லா.

குட் ஓசன் மூலம் கடற்பாசிகளை விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறார்.

கடல் பாதுகாப்பு மட்டுமல்லாமல் காலநிலை மாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் கேப்ரில்லா தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?