பங்குச் சந்தை
பங்குச் சந்தை Twitter
பிசினஸ்

4 நாட்கள், காணாமல் போன 24 லட்சம் கோடி ரூபாய் - எங்கு? என்ன?

NewsSense Editorial Team

பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு கடந்த ஏப்ரல் இருபத்தி ஒன்பதாம் தேதி அதிகபட்சமாக 57,975 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. நேற்று மே 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை 52,793 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.

இந்த இரண்டு வாரக் காலத்துக்குள் சென்செக்ஸ் 30 குறியீடு 5,182 புள்ளிகள் சரிந்து உள்ளன. இது சுமார் 8.9 சதவீதம் சரிவு.

இந்த சரிவினால், மும்பை பங்குச் சந்தையின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 265.88 லட்சம் கோடி ரூபாயிலிருந்தது, 241.34 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து உள்ளது. சுருக்கமாக 24 லட்சம் கோடி ரூபாய் இந்த சரிவில் காணாமல் போயுள்ளது.

இந்த 24 லட்சம் கோடி ரூபாயையும் நஷ்டம் என்று கூற முடியாது. சந்தை உச்சத்திலிருந்தபோது பங்குகளை வாங்கி வைத்து, இன்று சரிவின் போது தங்கள் பங்குகளை விற்று இருந்தால் மட்டுமே இவை அனைத்தையும் நஷ்டம் என்று கூற முடியும். எனவே இந்த மொத்த தொகையையும் நஷ்டம் என்று கூறுவது தவறு. ஆனால் 24 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு காணாமல் போனது மட்டும் உண்மை.

sharemarket

இத்தனை பெரிய சரிவுக்கு காரணங்கள் என்ன?

நுகர்வோர் பணவீக்கம்

கடந்த ஏப்ரல் 2022 காலத்துக்கான பணவீக்க விவரங்களை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்தறை வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் 2022 காலத்திலிருந்த 6.95 சதவீதத்தை விட ஏப்ரல் 2022 காலத்தில் 7.79 சதவீதமாக அதிகரித்துள்ளது நுகர்வோர் பணவீக்கம். இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய உச்சம் என செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த மே 2014 காலகட்டத்தில்தான் இந்தியாவின் நுகர்வோர் பணவீக்கம் 8.33 சதவீதமாக இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.

ஒரு பொருளாதாரத்திற்குப் பணவீக்கம் நல்லதுதான், ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக போகும் போது அது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மிக கடினமாகப் பாதிக்கும் அதுதான் தற்போது இந்தியப் பங்குச் சந்தையைப் பிடித்து ஆட்டுவிக்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் சமீபத்தில் இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி கூட வட்டி விகிதத்தை அதிகரித்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

dollar

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

இந்த மே 2022 காலத்தில் தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான கோடிகளோடு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள். இந்த மே மாதத்தின் முதல் 13 நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 21,390 கோடி ரூபாயை விற்று வெளியேறி இருக்கிறார்கள்.

2022ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து தங்கள் முதலீடுகளைப் பெற்று வெளியேறி வருகிறார்கள் என்கிறது என் எஸ் டி எல் தரவுகள். 2022ம் ஆண்டில் மட்டும் ஜனவரி முதல் மே 13ஆம் தேதி வரை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 740 கோடி ரூபாய் இந்திய முதலீடுகளை விற்று வெளியேறி இருக்கிறார்கள்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளைப் பெற்று வெளியேறும் போது இயற்கையாகவே பங்குகளின் விலை ஆட்டம் காணும் என்பது எதார்த்தமான விஷயம் தான். ஆனால் இதற்கு மேல் இந்தியப் பங்குச்சந்தை அடுத்த கொஞ்ச காலத்துக்கு உயர வாய்ப்பில்லை என வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் நம்பினால் மட்டுமே இப்படி தங்கள் முதலீடுகளைப் பெற்று வெளியேறுவார்கள். இது ஒரு ரிப்பில் விளைவு போல முதலில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை விற்பர், அதை பார்த்து உள்ளூர் முதலீட்டாளர்கள் விற்பர். இந்த பதற்றம் சந்தையில் ஒரு களேபரத்தை ஏற்படுத்தும், அது தான் தற்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

sharemarket

வலுவடையும் டாலர்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சமாக 77.50 ரூபாயைக் கடந்துள்ளது. இது இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதி இறக்குமதிகளை நேரடியாகப் பாதிக்கும் விஷயம் என்பதால் இந்தியப் பொருளாதாரத்தில் கணிசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

இதுபோக அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தியதும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையை விட்டு வெளியேறுவதற்கு ஒரு முக்கிய காரணம் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.

எல்லாத் துறையும் அடி

இந்தியப் பங்கு சந்தையில் வர்த்தகமாகும் அனைத்து துறைகளும் கடந்த இரு வாரங்களாக சரிவில் வர்த்தகமாகி வருவதாக மணிகன்ட்ரோல் வலைதளம் கூறுகிறது.

அதிகபட்சமாக பி எஸ் இ கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், பி எஸ் இ ரியாலிட்டி, பி எஸ் இ பவர் ஆகிய குறியீடுகள் கடந்த இரு வார காலத்தில் சுமார் 14 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளன. பி எஸ் இ மெட்டல் துறை அதிகபட்சமாக 17 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

பி எஸ் இ எஃப் எம் சி ஜி துறை 4.9 சதவீதம் மற்றும் பி எஸ் இ டெக்னாலஜி 6.5 4 என வீழ்ச்சி கண்டுள்ளன.

இப்படி எல்லாத் துறை சார் குறியீடுகளும் பலத்த சரிவில் வர்த்தகமாகி வரும்போது சென்செக்ஸ் மட்டும் இப்படி ஏற்றம் காணும்.

இந்த சரிவு முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. நல்ல தரமான பங்குகள் அடுத்த பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்குச் சந்தையில் தங்கள் இருப்பை உறுதி செய்து வளரக்கூடிய நிறுவனங்களைக் கண்டுபிடித்து அது சரியான விலைக்கு வரும் முதலீடு செய்யலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?