Iphone Canva
பிசினஸ்

Iphone14 இனி இந்தியாவில் தயாரிக்கப்படும்: ஆப்பிள் எடுத்த முடிவுக்கு காரணம் என்ன?

தற்போது சில அரசியல் பிரச்னை காரணமாக ஐஃபோன் 14 அறிமுக விழா ஒத்தி வைக்கப்படலாம் என்றும், ஐஃபோன் 14 இந்தியாவில் தயாரிக்கப்படலாம் என்றும் இந்தியா டைம்ஸ் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

NewsSense Editorial Team

உலகில் சாம்சங், சியாமி, ஹவாய், கூகுள், ஒப்போ, விவோ... என எத்தனையோ ஸ்மார்ட்ஃபோன்கள் புழக்கத்திலிருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் போல புகழ்பெற்றது, இளசுகளை தொடர்ந்து வசீகரித்து வரும் ஸ்மார்ட்ஃபோன் இல்லை என்றே கூறலாம்.

ஒவ்வொரு ஐஃபோன் மாடல் அறிவிக்கப்படும் போதும், அதற்கான அறிமுக விழா அத்தனை ஆராவாரத்தோடு தொடங்கப்படும். வரும் செப்டம்பர் மாதம் ஐஃபோன் 14 அறிமுகப்படுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆனால் தற்போது சில அரசியல் பிரச்னை காரணமாக ஐஃபோன் 14 அறிமுக விழா ஒத்தி வைக்கப்படலாம் என்றும், ஐஃபோன் 14 இந்தியாவில் தயாரிக்கப்படலாம் என்றும் இந்தியா டைம்ஸ் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

சர்வதேச அரசியல்

ஐஃபோன் பிரச்சனைக்குச் செல்வதற்கு முன், கொஞ்சம் சர்வதேச அரசியல் பிரச்னையைப் புரிந்து கொள்வோம். தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்கிறது சீனா. ஆனால் தைவானோ தாங்கள் ஒரு தனி நாடு என்றே தங்களைக் கூறிக் கொள்கிறது.

அமெரிக்கா தைவானை தனி நாடாக ஆதரிக்கிறது. சீனா அதை எதிர்க்கிறது. அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி தைவானுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டது சீனாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனா தன் கடுமையான லேபிலிங் சட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. அதன் படி, தைவான் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தைவான், சீனா என்று குறிப்பிடப்பட வேண்டும் அல்லது சீனா தைபி (China Taipei) என குறிப்பிடப்பட வேண்டும் என்கிறது. அப்படி குறிப்பிடப்படாத பொருட்களை சீனா தன் நாட்டுக்குள் கொண்டு செல்ல அனுமதி மறுக்க அந்நாட்டு அதிகாரிகளுக்கு உரிமையுள்ளது.

ஆப்பிள் பிரச்னை

ஆப்பிள் நிறுவனத்துக்குத் தேவையான சிப்புகளை தைவான் செமிகண்டக்டர் மேனுஃபேக்சரிங் கம்பெனி (Taiwan Semiconductor Manufacturing Company Limited - TSMC) தயாரிக்கிறது. அதன் பிறகுதான் அவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, சீனாவில் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைத்து ஐஃபோனாக உருவாக்கப்படுகின்றன. இது குறித்து ஆப்பிள் நிறுவனம், தன்னுடைய தைவான் உற்பத்தியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.

தைவானில் தயாரிக்கப்படும் பொருட்கள் 'மேட் இன் தைவான்' என்கிற குறியீட்டோடு ஏற்றுமதி செய்யப்பட்டால், அது சீனாவின் லேபிலிங் விதியை மீறுவதாக இருக்கும். எனவே தைவானிலிருந்து ஐஃபோன்களுக்கான பாகங்கள் சீனாவை வந்தடைந்தாலும் அதற்கு அபராதம் விதிப்பது தொடங்கி ஒட்டுமொத்த சரக்கை திருப்பி அனுப்புவது வரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என இந்தியா டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

சமீபத்தில் கூட தைவானிலிருந்து பெகட்ரான் என்கிற ஐஃபோன் ஒருங்கிணைக்கும் ஆலைக்கு உதிரி பாகங்கள் எடுத்துச் சென்ற போது, அவை பரிசீலனைக்காக தனியே வைக்கப்பட்டதாகவும், அந்த சரக்கு தொடர்பான இறக்குமதி விவரங்கள் சீனாவின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா இல்லையா என பரிசோதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவுக்கு வாய்ப்பு

கடந்த 2020 - 21 காலகட்டத்திலிருந்தே, சீனாவை மட்டும் எந்த ஒரு நிறுவனமும் சார்ந்து இருக்கக் கூடாது, அதே போல விநியோகச் சங்கிலியை பரவலாக்க வேண்டும் என்கிற நோக்கில் பல பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் உற்பத்தி, ஒருங்கிணைப்பு போன்ற பணிகளைப் பரவலாக்கி வருகின்றன.

அப்படி தங்கள் பொருட்கள் தொடர்பான விநியோகத்தைப் பரவலாக்க ஆப்பிள் உட்பட பல நிறுவனங்கள் சீனாவுக்கு இணையாக அல்லது மாற்றாக இந்தியாவைத் தேர்வு செய்து வருகின்றனர்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் 14 சீரிஸ் சீனாவில் மட்டுமின்றி இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்படலாம் என பகுப்பாய்வாளர் மிங் சி கோ (Ming-Chi Kuo) கூறியுள்ளார். இதற்கு சமீப காலமாக அதிகரித்து வரும் பூகோள ரீதியிலான அரசியல் பிரச்னைகளும் ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

சீனா அளவுக்கு இந்தியாவில் ஐஃபோன்களை உற்பத்தி செய்ய முடியாது என்றாலும், ஆப்பிள் நிறுவனம் சீனாவைச் சார்ந்து இருப்பதை ஓரளவுக்காவது குறைவது, ஒரு முக்கிய மைல் கல்லாகவே பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ஐஃபோன் 12 மற்றும் 13 சீரிஸ் மாடல்களை இந்தியாவிலேயே தயாரித்து வருகிறது. இப்போது ஐஃபோன் 14 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டால், அம்மாடல் அறிமுகப்படுத்தும் காலத்திலிருந்தே இந்தியாவில் கிடைக்கத் தொடங்குவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?