ஐடி நிறுவனம் Twitter
பிசினஸ்

மதுரை: ஊழியர்களுக்கு இலவச இணை தேடும் சேவை - IT நிறுவனத்தின் புதிய முயற்சி!

இளைய தலைமுறையின், அதுவும் 90ஸ் கிட்ஸின் தீரா இரண்டு பிரச்சனைகளான IT வேலை மற்றும் கல்யாணப் பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் விதமாக தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு இலவசமாக இணை தேடும் சேவை, திருமணம் முடிந்தால் ஊதிய உயர்வு வழங்க முன் வந்திருக்கிறது SMI.

Antony Ajay R

அட இப்படி ஒரு கம்பனி இருந்தா இங்க இருந்து யாரும் போக மாட்டாங்கப்பா.. என வியக்கும் விதமான நடவடிக்கை ஒன்றை எடுத்திருக்கிறது மதுரையைச் சேர்ந்த ஐடி நிறுவனமான ஶ்ரீ மூகாம்பிகா இன்ஃபோசொலூஷன்ஸ்(SMI).

அப்படி என்ன ஐடியாவா இருக்கும் என நினைக்கிறீர்களா? உண்மையான பிரச்னைகளை கண்டறிந்து தீர்வு காண்பது தான் சிறந்த தொழில் முனைவோர் செய்ய வேண்டியது என்பார் எலான் மஸ்க். அந்த வகையில் SMI நிறுவனம் இரண்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்கிறது.

முதல் பிரச்னை ஒரு ஐடி கம்பனி அதன் பணியாளர்களைத் தக்கவைப்பது. இரண்டாவது பிரச்னை அங்கு வேலை செய்யும் 90ஸ் கிட்ஸின் கல்யாணப் பிரச்சனை. இரண்டுக்கும் பொது தீர்வாக தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு இலவசமாக இணை தேடும் சேவையை வழங்க முன் வந்திருக்கிறது SMI.

ஐடி நிறுவனம்

SMI 2006ம் ஆண்டு சிவகாசியில் தொடங்கப்பட்ட ஒரு ஐடி நிறுவனம். 2010ல் மதுரைக்கு மாற்றப்பட்டது. 15 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படும் இந்த நிறுவனம் ஆண்டுக்கு 100 கோடி வரை வருமானம் ஈட்டுவதாகக் கூறப்படுகிறது.

SMI மற்றும் அதன் இணை நிறுவனங்களில் 750க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் 40 விழுக்காடு நபர்கள் 5 வருடங்களுக்கும் மேலாக இங்கு பணிபுரிகின்றனர். ஊழியர்களுக்கு 6 மாதத்துக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இலவசமாக இணை தேடுவதுடன் திருமணமாகும் போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு SMI நிறுவனத்தின் CEO செல்வ கணேஷ் அளித்த பேட்டியில், “இங்கு நீண்ட காலமாக இருக்கும் ஊழியர்களைக் கூட நாம் காண முடியும். அவர்கள் இங்கிருந்து வேறு இடங்களுக்குச் செல்லும் எண்ணத்தை நாம் கொடுக்கக் கூடாது. அவர்கள் அப்படிச் சிந்திக்கும் முன்னரே நாம் அவர்களுக்கு வேண்டியதைச் செய்ய வேண்டும். ஊழியர்கள் இங்கு எதாவது சிக்கல்களைச் சந்திக்கும் போது அவர்கள் என்னை நேரடியாகச் சந்திக்க முடியும். அப்படிப்பட்ட நெருக்கத்தை உருவாக்க தேவையான நேரத்தையும் பணத்தையும் செலவிட்டுத் தான் ஆக வேண்டும். எல்லாவற்றையும் வணிகமாக மட்டுமே காண முடியாது.” என்கிறார் செல்வ கணேஷ்.

இந்த சேவயை மற்ற கம்பனிகளும் பின்பற்றலாமோ? ஐடியா நல்லா இருக்கே.

வேலைக்கு வேலையும் ஆச்சு, அலமாரியும் வெள்ளையாச்சு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?