இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டாக் மார்கெட் நிறுவனம் ஜீரோதா (Zerodha). இதன் நிறுவனருக்கு வயது 36 தான்.
நிகில் காமத் இந்திய இளையர்கள் பலருக்கும் ரோல் மாடலாக இருக்கிறார். இவரது பள்ளிக்கல்வியை விட்டுவிட்டு 17 வயதில் ட்ரேடிங்கில் தனது பயணத்தைத் தொடங்கினார் நிக்கில்.
நிகிலும் அவரது அண்ணனான நிதின் காமத்தும் இணைந்து 2010ம் ஆண்டு தங்களது முதல் நிறுவனத்தை நிறுவினர்.
இவர்களது நிதி தொழில்நுட்ப (Fintech) நிறுவனம் ஜீரோதா கடந்த கால் நிதியாண்டில் 2000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.
இவரது நிறுவனம் இந்திய ஸ்டாக் ப்ரோக்கரேஜ் துறையில் புதிய மைல்கல்லை நாட்டியுள்ளது.
இந்தியாவின் இளம் பில்லியனராக உயர்ந்துள்ள நிகில் காமத்தின் சுவாரஸ்யமான வாழ்க்கையைக் குறித்துப் பார்க்கலாம்.
நிகில் காமத் சிறுவயதில் இருந்தே பள்ளிக்குச் செல்வதை வெறுத்துள்ளார். தனது 14 வயதிலேயே செல்போன்களை விற்கத் தொடங்கியுள்ளார். இதனால அவரது தாய் மிகுந்த கோபமடைந்திருக்கிறார்.
அம்மா மட்டுமில்லாமல் அவரது பள்ளிநிர்வாகமும் கூட இதனால் மிகுந்த கோபமடைந்திருக்கிறது. அவரை 10ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.
இதனால் தனது இளம் வயதில் மாதம் 8000 ரூபாய் சம்பளத்துக்கு கால் சென்டர் ஒன்றில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார் நிகில். அந்த நேரத்தில் தனது வீட்டில் இருந்தும் வெளியேறி காதலியுடன் இருக்கவும் ஆரம்பித்துள்ளார்.
"நான் மாலை 4 மணி முதல் இரவு 1 மணி வரை கால் சென்டரில் பணியாற்றுவேன். பகலில் கொஞ்சமாக ட்ரேடிங் செய்வேன். நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்." என ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
"நீங்கள் குடும்ப அமைப்பில் இருந்து வெளியேறி, உறவினர்களால் ஜட்ஜ் செய்யப்பட்டால் மிகவும் மோசமான நிலையில் இருப்பீர்கள்" எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இவை அனைத்துக்கும் மத்தியில் நிகிலின் தந்தை அவரை சப்போர்ட் செய்துள்ளார் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
2006ம் ஆண்டு முதன் முதலாக ஒரு அமெரிக்கரின் பணத்தை மேலாண்மை செய்யும் பொறுப்பை ஏற்றார் நிக்கில்.
பணத்தை கையாளுவது குறித்து அதிகம் தெரிந்துகொண்டவர் காமத் & அசோசியேட்ஸ் என்ற புரோக்கரேஜ் நிறுவனத்தைத் தொடங்கினார்.
2010ம் ஆண்டு தனது வேலையை விட்டுவிட்டு ஜீரோதா நிறுவனத்தைத் தொடங்கினார். ஜீரோதா நிறுவனத்தில் அவரது அண்ணனும் இணைந்தார். இருவரும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கத் தொடங்கினர்.
நிகிலின் தற்போதைய சொத்து மதிப்பு 28,000 கோடி ரூபாய்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust