parag agarwal Twitter
பிசினஸ்

Twitter : “என் வேலை போவதைப் பற்றி கவலை இல்லை, ஆனால்...” - ட்விட்டர் CEO பராக் அகர்வால்

ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் உட்படப் பலரை மஸ்க் பணிநீக்கம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நெட்டிசன்கள் இந்தியாவைச் சேர்ந்த சிஇஓ பாராக் அகர்வால் குறித்து கவலை தெரிவித்திருந்தனர். ஆனால் பராக் அகர்வால் அவரது பணி நீக்கம் குறித்துக் கவலைப்படுவதாக இல்லை.

Antony Ajay R

ட்விட்டர் நிறுவனத்தை உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் வாங்குவதாக அறிவித்ததால் அவர் அதில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப் போகிறார் என அறிந்து கொள்ள மொத்த உலகம் ஆவலாக இருக்கிறது.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்னரே அதன் நிர்வாக குழு மீது விமர்சனங்களை வைத்திருந்தார் எலான் மஸ்க். அதனால் ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் உட்படப் பலரை அவர் பணிநீக்கம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நெட்டிசன்கள் இந்தியாவைச் சேர்ந்த சிஇஓ பாராக் அகர்வால் குறித்து கவலை தெரிவித்திருந்தனர்.

ஆனால் பராக் அகர்வால் அவரது பணி நீக்கம் குறித்துக் கவலைப்படுவதாக இல்லை. சமீபத்தில் ட்விட்டர் பயனர் ஒருவர், “நான் பராக் அகர்வாலுக்காக வருத்தப்படுகிறேன். அவர் திட்டங்களை வைத்திருந்திருப்பார். ஆனால் இப்போது அவரின் மொத்த குழு குறித்தும் நிச்சயமற்ற தன்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.” என ட்விட் செய்திருந்தார்.

Elon Musk

இதற்குப் பதிலளித்த பராக் அகர்வால், “நன்றி, என்னைப் பற்றி கவலை வேண்டாம். ட்விட்டர் சேவையும் அதனை முறைப்படுத்தும் நபர்களும் மிக முக்கியம்” என பதிலளித்தார். நிறுவனத்தில் தனக்கு நிச்சயமற்ற தன்மை இருந்தாலும் ட்விட்டரின் வருங்காலம் குறித்தே பராக் அதிகம் கவலைப்படுகிறார்.

இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் கடந்த நவம்பர் மாதம் ட்விட்டர் சிஇஓ-வாக பதவியேற்றார். எலான் மஸ்கில் 44 பில்லியன் டாலர் டீல் முழுமையாக இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேறும். அதன் பிறகு பராக் அகர்வால் உள்ளிட்ட நபர்கள் பொறுப்பிலிருந்து மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது.

முன்னதாக, சிஇஓ பராக் அகர்வால் நிறுவனத்தின் தலைமை மாறி ஓராண்டுக்குள் நீக்கப்பட்டால் அவருக்கு மஸ்க் 43 மில்லியன் டாலர் வரை பணம் செலுத்த வேண்டும் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

எலான் மஸ்க் ட்விட்டர் நிர்வாகத்தின் குறைகளை அவ்வப்போது எடுத்துக்கூறி வந்தாலும் நிர்வாகிகளை மாற்றுவது குறித்து இதுவரை வெளிப்படையாகப் பேசவில்லை. ஒரு வேளை பராக் அகர்வால் விரைவாக வெளியேற்றப்பட்டால் அடுத்த சிஇஓ-வாக பதவியேற்கப் போவது யார்? எனக் காண ட்விட்டர் உலகமே ஆவலுடன் இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?