வைரத்துக்குள் வைரம் : அதிசய கல்லை கண்டுபிடித்த சூரத் நிறுவனம் - மதிப்பு என்ன? Twitter
பிசினஸ்

வைரத்துக்குள் வைரம் : அதிசய கல்லை கண்டுபிடித்த சூரத் நிறுவனம் - மதிப்பு என்ன?

Antony Ajay R

சூரத்தில் உள்ள ஒரு நிறுவனம் முதன்முதலாக வேறெங்கும் இல்லாத வகையில் ஒரு வைரத்துக்குள் வைரம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது.

வி டி குளோபல் என்ற நிறுவனம் இந்த வைரத்தைக் கண்டுபிடித்தது. இது 0.329 காரட் டி-நிற வைரக் கல்லாகும்.

இந்த வைரத்துக்கு நிறுவனத்தினர் 'துடிக்கும் இதயம்' அதாவது Beating Heart எனப் பெயர் வைத்துள்ளனர்.

இந்த வைரம் கடந்த அக்டோபர் மாதமே கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வைரம் நிச்சயமாக அனைவருக்கும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும். இதில் ஒரு வைரத்துக்குள் இன்னொரு வைரம் இருக்கிறது.

இது போன்ற ஒன்றை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை ஏனெனில் இப்படிப்பட்ட ஒரு வைரம் கிடைப்பதென்பது அரிதிலும் அரிதான நிகழ்வு.

இந்த வைரத்தை முதன்முதலாகப் பார்த்தவர் இதற்கு துடிக்கும் இதயம் என்ற பெயரை பரிந்துரைத்துள்ளார்.

"சூரத்தில் இருக்கும் வைரங்களை சோதித்தபோது நாங்கள் இந்த வைரத்தைக் கண்டுபிடித்தோம். இதற்குள் ஒரு சிறிய வைரம் சிக்கிக்கிடந்தது. உள்ளே இருந்த வைரம் அங்கும் இங்குமாக ஆடிக்கொண்டிருந்தது. இதற்கு முன்னர் இப்படி ஒன்றை நாங்கள் பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதுமில்லை" என வி டி குளோபல் நிறுவனத்தின் சேர்மன் வல்லப் வாகசியா கூறியுள்ளார்.

விடிஜி நிறுவனம் உலகம் முழுவதும் வைரம் வியாபாரம் செய்கிறது. சூரத் மற்றும் மும்பையில் தலைமையகங்களைக் கொண்டுள்ளது.

இப்போது அந்த அதிசய வைரத்தை இங்கிலாந்தில் உள்ள டி பீர்ஸ் என்ற நிறுவனத்துக்கு ஆராய்ச்சிகளுக்காக அனுப்பியுள்ளனர்.

இந்த நிறுவனத்தில் பல சோதனைகள் நடக்கும். அதன் பிறகு இந்த வைரம் உலக அளவிலான அங்கீகாரத்தைப் பெறும். அதன் பின்னரே இந்த விலைமதிப்பற்ற பொக்கிஷத்தின் மதிப்பு தெரியவரும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?