இந்திய ரூபாய்
இந்திய ரூபாய் NewsSensetn
பிசினஸ்

10 ஆண்டுகளில் 54% சரிந்த இந்திய ரூபாய் மதிப்பு - கரன்சி சரிவின் கோர முகம் என்ன?

NewsSense Editorial Team

சமீபத்தில் மத்திய அரசு தன் கலால் வரியைக் குறைத்துக் கொண்டதால் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை மீண்டும் 100 ரூபாயைத் தொட்டுள்ளது. இப்படி மத்திய அரசு தன் கலால் வரியைக் குறைக்காமலேயே கூட நம் விலை குறைய ஒரு வழி உள்ளது.

அதற்கு அமெரிக்க டாலரின் மதிப்பு குறைய வேண்டும். இல்லையெனில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க வேண்டும்.

உலகில் சுமார் 180 நாடுகளின் அதிகாரப்பூர்வ கரன்சிகள் உலகம் முழுக்க வர்த்தகமாகி வருகின்றன. அதன் மதிப்பு ஒவ்வொரு நிமிடத்திற்கும் என் சொல்லப்போனால் ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

சில நாடுகளில் பொருட்களின் விலை அமெரிக்க டாலரில் பட்டியலிடப்பட்ட இருக்கும் பார்த்திருக்கிறீர்களா? காரணம் அந்நாட்டு கரன்சிகள் குறைவான காலகட்டத்தில் அதிக விலை ஏற்றம் அல்லது கடும் விலை வீழ்ச்சியை காண்பவையாக இருக்கும்.

இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஆகிய நாடுகளின் கரன்சிகள் இந்த வாலடைல் கரன்சிகளுக்கு உதாரணமாகக் கூறலாம் என்கிறது கல்ஃப் நியூஸ் வலைதளக் கட்டுரை ஒன்று.

கடந்த தசாப்த காலத்தில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 54 சதவீதம் சரிந்துள்ளதாக இன்வெஸ்டிங் வலைதளத் தரவுகள் கூறுகின்றன.

Shipping

பொதுவாகவே ஆசியாவைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, பிலிப்பைன்ஸ்... ஆகிய நாடுகளின் கரன்சிகள் தொடர்ந்து அதிக விலை ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த நாணய குறியீடாகக் கருதப்படும் யூரோ, சுவிட்சர்லாந்து ஃபிராங்க், ஜப்பான் யென், பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங்... ஆகிய நாணயங்கள் அமெரிக்க டாலரை போல நிலையாக வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, பிரிட்டன், ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளின் கரன்சிகள் நிலையாக இருப்பதையும் இந்தியா, வங்கதேசம் போன்ற வளரும் நாடுகளின் கரன்சிகள் அதிக விலையை மாற்றத்தையும் காண்பதை ஓரளவுக்கு இதை வைத்துப் பார்க்கும்போதே நமக்குப் புரிந்திருக்கும்.

பொதுவாக கரன்சியை 'ஹார்ட்' கரன்சி 'சாஃப்ட்' கரன்சி என இருவகைப்படுத்திக் கூறுவர். அமெரிக்க டாலர், யூரோ... போன்ற அதிக விலை மாற்றம் காணாத கரன்சிகள் ஹார்ட் கரன்சிகள்.

இந்திய ரூபாய், பாகிஸ்தானிய ரூபாய்... போன்ற அதீத விலை மாற்றம் காணும் கரன்சிகள் இரண்டாவது ரக சாஃப்ட் கரன்சிகள்.

பொதுவாகவே சர்வதேச அளவில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், ஏற்றுமதி இறக்குமதி போன்ற வியாபாரங்களில் அதிக மதிப்பு கொண்ட அதாவது அதிக விலை மாற்றம் இல்லாத ஒரு கரன்சியை வைத்துத்தான் வியாபாரத்தில் விலை பேசப்படும். எனவே இயல்பாகவே ஹார்ட் கரன்சிகள் என்றழைக்கப்படும் டாலர் யூரோ போன்ற கரன்சிகளின் மதிப்பு கூடும்.

Indian Currency

இதன் அடிப்படையில் தான் உலக அளவில் பல்வேறு சர்வதேச பரிவர்த்தனைகளும் அமெரிக்க டாலரில் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இயல்பாக அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாக இருக்கும், சொல்லப் போனால் அதிகரிக்கும்.

பொருளாதாரத்தில் ஒரு பொருளின் தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்து அதனுடைய மதிப்பு அதிகரிக்கிறது இல்லையா? அதேபோல ஒரு நாட்டின் கரன்சி கூட அதனுடைய தேவை மற்றும் விநியோகத்தை பொருத்து, அதன் மதிப்பு மாறுபடும். அமெரிக்க டாலரின் தேவை அதிகமாக இருக்கிறது, விநியோகம் குறைவாக இருக்கிறது எனவே மதிப்பு அதிகம்.

இதுபோக ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகள் (உதாரணத்திற்கு இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி) வகுக்கும் பணக் கொள்கைகள், நாட்டில் நிலவும் நுகர்வோர் பணவீக்கம், அந்நாட்டு அரசியல் மற்றும் பொருளாதார சூழல் என பல காரணங்கள், ஒரு நாட்டின் கரன்சி மதிப்பை பாதிக்கும்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு சாதாரண மனிதனை எப்படி பாதிக்கும்.

Currency

முதலில் நெகடிவ் பக்கங்களைப் பார்க்கலாம்

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பல பொருட்கள் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கப்படுகின்றன. இறக்குமதி பொருட்கள், அது சார்ந்த உபபொருட்களை நாம் வாங்க வேண்டுமானால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு பெட்ரோலிய பொருட்களைக் கூறலாம்.

அதேபோல இந்தியாவிலிருந்து ஒருவர் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டுமானால் இந்திய ரூபாயைக் கொடுத்து அமெரிக்க டாலர் அல்லது அந்த குறிப்பிட்ட வெளிநாட்டு கரன்சியை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது அதிக இந்திய ரூபாய் கொடுத்து ஒரு டாலரை வாங்க வேண்டியிருக்கும்.

சில நன்மைகள்

உங்கள் வீட்டில் யாரேனும் ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறாராயின், அவர் அனுப்பும் அமெரிக்க டாலர் அல்லது வெளிநாட்டுப் பணத்திற்கு அதிக இந்திய ரூபாய் கிடைக்கும்.

இந்தியாவில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்பவர்கள் பெரும்பாலும் அமெரிக்க டாலரில்தான் தங்களது வேலையை முடித்து சரக்கு எல்லாம் அனுப்பி வைத்திருப்பார்கள் இப்போது அவர்களுக்கு டாலர் என்று வரும்போது அதிக இந்திய ரூபாய் கிடைக்கும்.

ஒரு நாட்டின் கரன்சி எவ்வளவு வேண்டுமானாலும் சரியலாமா?

நிச்சயமாக அப்படிச் சரியக்கூடாது. அமெரிக்க டாலருக்கு நிகரான ஒரு நாட்டின் கரன்சி சகட்டுமேனிக்கு தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது என்றால் அந்த நாட்டின் பொருளாதாரம் நிலை குலைந்து வருகிறது என்று பொருள். அதற்கு மிக சமீபத்திய உதாரணம் துருக்கி நாட்டின் லிரா கரன்சி நெருக்கடியைக் கூறலாம்.

அந்நாட்டு கரன்சியின் அதீத சரிவினால் பணவீக்கம் சகட்டுமேனிக்கு அதிகரித்துவிட்டது. மக்கள் அன்றாட உணவுக்குக் கூட மிக அதிகப் பணத்தைச் செலவழித்துச் செலவழித்து வருகின்றனர். எனவே ஒரு நாட்டின் கரன்சி நிலையாக இருப்பது மிகவும் அவசியம். நம் நாட்டில் இப்படி ஒரு நிலை வரக் கூடாது என்று எதிர்பார்ப்போம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?