Elon Musk Twitter
பிசினஸ்

ட்விட்டர் : ஏன் விற்கப்பட்டது? அதன்பின் உள்ள வணிக அரசியல் என்ன?

Antony Ajay R


இன்று காலை முதல் உலகெங்கிலும் பேச்சு பொருளாகியிருக்கிறார் எலான் மஸ்க். காரணம் அவர் ட்விட்டர் நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியிருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவது குறித்துக் கடந்த 2017ம் ஆண்டு முதலே பேசி வரும் எலான் மஸ்க், சில நாட்களுக்கு முன்பு அதன் 9% பங்குகளை வாங்கி பங்குதாரரானார்.

ஆனால் அடுத்த கொஞ்ச நாட்களிலேயே ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான தனது டீலை முன்வைத்துப் பரபரப்பைக் கிளப்பினார். பல கூச்சல், குழப்பங்களுக்குப் பிறகு எலான் மஸ்க் இறுதியாக ட்விட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றியிருக்கிறார்.

மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதன் பின்னணியில் 5 வருட ஆசை, வருங்காலத்துக்கான திட்டங்கள் இருந்தது. ஆனால் ட்விட்டர் உரிமையாளர் ஜாக் டார்சி அதனை விற்பது குறித்து என்றாவது பேசியிருக்கிறாரா? பிறகு எதற்காக ட்விட்டர் நிறுவனம் விற்கப்பட்டது?

Jack Dorsey

ட்விட்டரை வாங்க எலான் மஸ்க் முடிவு - விற்கும் முடிவு யாருடையது?

ட்விட்டர் நிறுவனத்துடன் உணர்வுப் பூர்வமான இணைப்பைக் கொண்டிருந்தது அதன் நிறுவனர் ஜாக் டார்சி மட்டும் தான். தவிர ட்விட்டர் பயனர்கள் ஓரளவு அதனுடன் இணக்கமாக இருந்திருக்கலாம். மற்ற படி அதன் போர்ட் உறுப்பினர்களிலிருந்து அதன் சிஇஓ பராக் அகர்வால் வரை அத்தனை பேருக்கும் ட்விட்டர் வியாபாரத்தின் பகுதி தான். இந்த வியாபாரத்தில் எலான் மஸ்க் கொடுத்த 44 பில்லியன் நல்ல விலை. அதனால் அதை யாரும் தடுக்கவில்லை.

விலையைக் கடந்து மற்றொரு முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது. அதனையும் காணலாம்.

Twitter CEO - Parag Agrawal

44 பில்லியன் எந்த அளவு சிறந்த விலை

மஸ்க் ட்விட்டருக்கு கொடுத்த விலை லின்க்ட் இன் தளத்தை வாங்க மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் கொடுத்த 28 பில்லியன் டாலரை விட மிகப் பெரியது. இன்று வெற்றிகரமான சமூக வலைதளமாக தன்னை நிலை நிறுத்திக்கொண்ட இன்ஸ்டாகிராமை பேஸ்புக் வாங்கிய போது அதற்குக் கொடுத்த விலை வெறும் 1பில்லியன் டாலர் மட்டுமே! வாட்ஸ்அப்பும் மிகக் குறைந்த விலையில் தான் வாங்கப்பட்டது. ஆனால் ட்விட்டர் நிறுவனத்துக்கு மஸ்க் கொடுத்த ஆஃபர் அதனை விற்பது குறித்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு அந்நிறுவனத்தைத் தள்ளியிருக்கும்.

ட்விட்டர் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 39 பில்லியன் டாலர். இதிலிருந்து மதிப்பு உயருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து தான் கண்டறியவேண்டும் ட்விட்டரின் நிலை அப்படி. ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியிலிருந்து ஜாக் டார்சி கடந்த ஆண்டு விலகியது முதல் ட்விட்டர் நிறுவனத்தின் மதிப்பு சரியத் தொடங்கியது. தொடர்ச்சியாகச் சரிந்து கடந்த பிப்ரவரி 24ம் தேதி அதன் ஒரு பங்கின் மதிப்பு $31.30 எனக் கணக்கிடப்பட்டது. இதனால் 44 பில்லியன் டாலர் அல்லது ஒரு பங்குக்கு 54.20 டாலர் என்பது ட்விட்டருக்குச் சிறந்த விலையாகப் பார்க்கப்பட்டது.

Twitter

எலான் மஸ்கின் மிரட்டல்

ஒரு வேளை இன்று ட்விட்டர் விற்கப்படாவிட்டால் மஸ்க் என்ன செய்வார் என்பதையும் ட்விட்டர் போர்ட் சிந்திருக்க கூடும் அல்லவா?

மஸ்க் கடந்த ஏப்ரல் 14ம் தேதி ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவது குறித்த தனது முடிவை வெளியிடுவதற்கு சில மாதங்கள் முன்பிருந்து அதன் பங்குகளை வாங்கத் தொடங்கியிருந்தார். ட்விட்டர் தலைவர் பிரட் டெய்லருக்கு தனது கடிதத்தை அனுப்பும் போது அவரிடம் 9 விழுக்காட்டுக்கும் மேலான பங்குகள் இருந்தன.

தனது கடிதத்தில் “என்னுடைய ஆஃபரை ஏற்காவிடில் ட்விட்டரின் பங்குதாரராக இருப்பது குறித்து நான் மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்” என வெளிப்படையாக மிரட்டியிருந்தார் மஸ்க்.

சந்தையில் ஒரு நிறுவனத்தின் மதிப்பு அதன் ஒவ்வொரு பங்குதாரரையும் சார்ந்தது. ஒரு வேளை ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்க முடியாமல் போயிருந்தால் 9% ட்விட்டர் பங்குகள் மொத்தமாகச் சந்தைக்கு வந்து ட்விட்டரின் மதிப்பு அதல பாதாளத்தில் அடைந்திருக்கும்.

இப்போது ட்விட்டர் நிறுவனத்தின் நிலையிலிருந்து சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரம். அதிக வளர்ச்சி இல்லாத ஒரு நிறுவனம். அதன் 9% பங்குகள் தொங்கலில் இருக்கும் சூழலில் அதற்கு 44 பில்லியன் டாலர்கள் கொடுக்க மஸ்க் முன்வருகிறார் என்றால் அதனை விற்கத்தானே வேண்டும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?