Vikings
ஸ்காண்டினாவியா பகுதிகள் என்று இன்று அழைக்கப்படும் நார்வே, ஸ்வீடன், டென்மார்க் பகுதிகளில் இருந்த வைக்கிங்ஸ் இனம் தங்கள் கப்பல் படைகளைக் கொண்டும், போர் வியூகங்களைக் கொண்டும் மொத்த ஐரோப்பாவிற்கும் தண்ணிகாட்டியது. இவர்களது கதையைக் கொஞ்சம் மசாலா கலந்து சொல்லும் வரலாற்றுப் புனைவுத் தொடர்தான் ‘வைக்கிங்ஸ்’ (Vikings). 9ம் நூற்றாண்டுக்கும் 11ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை வைக்கிங்ஸ் காலம் என குறிப்பிடுவார்கள். தூக்கமில்லாமல் பார்த்தாலும் மூன்றரை நாட்களில் தான் பார்க்க முடியும்.
வெப் சீரிஸ்கள் தமிழ் சினிமா வரை பரவி வருகிறது சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான விலங்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. இதென்னப்பா சீரியல் மாதிரி இருக்கு என்ற 80 கிட்டுகளும் உலகத்தோடு ஒட்டி வாழ சீரிஸ்களை பார்க்கத் தொடங்கிவிட்டனர். படங்களைப் போல இல்லாமல் சீரிஸ்களுக்கு அதிக நேரம் செலவிட நேருவதால் ஒவ்வொரு சீரிஸையும் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் தேவை. குழப்பத்தில் இருப்பவர்களுக்காக இதோ Netflix-ல் இருந்து பத்து சஜசன்கள்!
Narcos
வழக்கமாக வெளிவந்து கொண்டிருக்கும் கேங்க்ஸ்டர் திரைப்படங்களுக்கும், 'நார்கோஸ்' சீரிஸுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கிறது. உலகமே வியந்து பார்த்த போதை மருந்து மாஃபியா தலைவன் பாப்லோ எஸ்கொபாரின் வாழ்க்கைதான் 'நார்கோஸ்'. கொலம்பியாவின் நிலத்தையும், அழகான ஸ்பேனிஷ் மொழி, அந்த நாட்டின் அரசியல் திருப்பங்கள் பாப்லோவின் போதை மருந்து பிஸினஸில் செய்யும் மாற்றங்கள், பாப்லோவின் கைது, மீண்டும் அவனது வளர்ச்சி, இறுதியில் சுட்டுக் கொல்லப்படுதல்... என உண்மைக்கு நெருக்கமான கதையை பாப்லோ எஸ்கொபாரின் பார்வையிலும், அமெரிக்க போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரி ஒருவனின் பார்வையிலும் நார்கோஸில் சொல்லியிருப்பார்கள்.
இதைத் தொடர்ந்து நார்கோஸ் மெக்சிகோ எனும் சீரிஸும் வந்தது. ஒன்றரை நாளில் நிதானமாக பார்த்து முடிக்க முடியும்.
Friends
அமெரிக்காவைச் சேர்ந்த ஆறு 80'ஸ் கிட்ஸ் நண்பர்களின் கதைதான் ஃப்ரெண்ட்ஸ். எல்லோரையும் கவர்ந்த இந்த சீரிஸானது 10 சீஸன்களாக வெளிவந்தது. தன்பால் ஈர்ப்பு, ஒருவருக்குப் பலருடன் ரிலேஷன்ஷிப், பிரேக்கப், டேட்டிங் என `ஃப்ரெண்ட்ஸ்’ சீரிஸ் உடைத்துப் பேசும் விஷயங்கள் ஏராளம்.
`உறவுகளுக்குள் எதையுமே எமோஷனலாக எடுத்துச் செல்லும்போதுதான் பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. இதையெல்லாம் சீரியஸாக எடுக்காமல் மனித இயல்பே அதுதான் எனப் புரிந்துகொள்ளுங்கள்' என சியர்ஸ் சொல்கிறது இந்த சீரிஸ். 1994-ல் ஆரம்பித்து 2004 வரை அமெரிக்காவில் டிவி சீரியஸாக ஒளிபரப்பனாது. 25 ஆண்டுகள் கடந்தும் இந்த சீரிஸுக்கு இன்னும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் இதன் ஹிட் சீக்ரெட்.
ஐந்து நாட்கள் ஒரு மணி நேரம் போகும் இதற்கு வேலை வெட்டியில்லாத ஒரு வாரம் போதுமானது.
MoneyHeist
ஸ்பானிஷ் க்ரைம் ட்ராமா தொடராக 2017-ம் ஆண்டு வெளிவந்து ஹிட் அடித்த தொடர் 'Money Heist'. ஸ்பெயினில் இருக்கும் ராயல் மின்ட் என்கிற இடத்தை ஆக்கிரமித்து நோட்டுகளை அச்சடித்துக் கொள்ளையடிக்கத் திட்டமிடும் கும்பலுக்கும் போலீஸுக்கும் நடக்கும் டாம் அண்ட் ஜெர்ரிதான் இந்த சீரிஸின் ஒன்லைன்.
புரொஃபசர், நைரோபி, டோக்கியோ, இன்ஸ்பெக்டர் ரக்கீல் என இந்த சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் மக்களிடையே அத்தனை பிரபலம். இதில் மொத்தம் 5 சீசன்கள் உள்ளன. இரண்டு நாட்கள் ஒதுக்கினால் முழுவதையும் பார்த்துவிடலாம்.
Sex education
பிரிட்டிஷ் காமெடி ஜானரைச் சேர்ந்த வெப் சீரிஸ் செக்ஸ் எஜூகேஷன். செக்ஸ் தெரபிஸ்ட்டான அம்மாவுக்கும் அவரது பையனின் பள்ளி வாழ்க்கைக்கும் இடையில் சுழலும் கதைதான் இதன் ஒன்லைன். டிவி சீரியலாக ஹிட்டடித்த இதன் உரிமத்தை நெட்பிளிக்ஸ் கையில் எடுத்தது.
இது வரை மூன்று சீசன்களை வெளியிட்டிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். முதல் இரண்டு சீஸனிலும் டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் பள்ளி மாணவர்களின் செக்ஸுவல் பிரச்னைகளையும் அவர்கள் அதைக் கையாளும் விதத்தையும் பேசியிருக்கும் இந்த சீரிஸ் ரசிகர்களிடையே செம ஹிட். ஒரு நாள் உட்கர்ந்தால் முழுவதும் பார்த்துவிடலாம்.
அமெரிக்கன் வெஸ்டர்ன் க்ரைம் ட்ராமா சீரியஸாக 2008-ல் ஆரம்பித்து 2013 வரை ஒளிபரப்பான தொடர் பிரேக்கிங் பேட். ஹைஸ்கூல் ஒன்றில் வேதியியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் வால்டர் வொயிட் நுரையீரல் கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு நபர்.
மிடில் க்ளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவரான வால்டருக்கு நோய் வாதை, வாழ்க்கை குறித்தான அச்சம், இறப்பிற்குப் பிறகு தனது குடும்பத்துக்கான வருவாய் என எல்லாம் அவரை மிகுந்த மன அழுத்தத்திற்குத் தள்ள, வால்டரும் அவரது முன்னாள் மாணவரும் சேர்ந்து பணத்திற்காகச் செய்யும் கிரிமினல் வேலைகளே `பிரேக்கிங் பேட்’. 3 நாட்களில் பார்த்து முடிக்கக்கூடிய நீளம் தான்.
The End of the f***ing world
கிராஃபிக் நாவலாக வெளிவந்து ஹிட்டடிக்க அதைத் தொடர்ந்து வெப் சீரிஸாகவும் வெளிவந்து ஹிட்டடித்தது 'The End of the f***ing world'. 17 வயதுச் சிறுவன் ஜேம்ஸ்தான் இந்த சீரிஸின் சைக்கோயிக் ஹீரோ.
சிறு வயதிலிருந்தே ஒருவித மன அழுத்தத்தால் செல்லப் பிராணிகளைக் கொன்று வரும் ஜேம்ஸுக்கு ஒரு கட்டத்தில் அந்த செய்கைப் போர் அடித்துவிட, அடுத்த நிலையாக மனிதர்களைக் கொல்ல முடிவெடுக்கிறான். இதற்கு முதல் டார்கெட்டாக அவனது வகுப்புத்தோழி அலீஸாவைத் தேர்ந்தெடுக்க, இதன் பின்னர்தான் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்பது தெரிய வரும். ஒரு கட்டத்தில் இருவரும் வீட்டை விட்டு வெளியேற, அதற்குப் பிறகான பயணம்தான் மொத்தக் கதையும். நடுநடுவில் சில டிவிஸ்ட் அண்ட் டேர்ன்கள் வைத்து சுவாரஸ்யம் சேர்த்திருப்பார்கள்.
13 Reasons why
அமெரிக்க எழுத்தாளரும் நாவலாசிரியருமான ஜெய் அஷர் எழுதிய 13 Reasons why என்கிற நாவல், டீன் ட்ராமா சீரிஸ் ஜானரில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பானது. ஒரே ஸ்கூலில் படித்துவரும் க்ளே ஜென்சனும், ஹன்னா பேக்கரும் டீனேஜ் நண்பர்கள். பள்ளியில் ஹன்னா பேக்கரைச் சுற்றி டீஸிங், ராகிங், காஸிப், பாலியல் துன்புறுத்தல் என இது மாதிரியான சில பிரச்னைகள் துரத்துவதோடு சில உடல்ரீதியிலான பிரச்னைகளும் இருக்கும். இதனால் தற்கொலை முயற்சி செய்கிறார்.
அதுவும் எதற்காகத் தற்கொலை செய்கிறேன் என்பதை 13 கேசட்டுகளில் பதிவு செய்து அதை க்ளேக்குக் கிடைக்கும்படி செய்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். அதற்குப் பின் எதிர்பாரா சில டிவிஸ்டுகளோடு நகர்கிறது திரைக்கதை. இது உங்களுக்கு விறு விறுப்பான 13 மணி நேரங்களை வழங்கும்
Stranger things
நிகழ் உலகத்தைப் போலவே இணையொத்த இன்னோர் உலகமும் உள்ளது என்பதை ஏலியன் கலந்த சயின்ஸ் ஃபிக்ஷனில் சொல்லியிருக்கும் சீரிஸ்தான் Stranger things.
இதில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஜிம் ஹாப்பார் இறப்பதோடு முடியும் மூன்றாவது சீஸனின் முடிவுக்கு இன்னமும் டீகோடிங் செய்துகொண்டிருக்கிறார்கள் சிலர்.
இந்த சீரிஸை ஒரே நாளில் பார்த்து விட முடியும்.
உலக ரசிகர்களின் மனங்கவர்ந்த ஒரு வெப் சீரிஸ் DARK. 'டைம் டிராவல்' என்பது மனிதர்களுக்கு என்றுமே ரசனையூட்டும் ஒன்றுதான். இந்த 'காலப்பயணத்தை' மிகவும் லாகவமாகக் கையாண்டு வெற்றி கண்டுள்ளது, இந்த ஜெர்மன் வெப் சீரிஸ்! 'கயாஸ் தியரி' போன்று கதையில் ஒரு வகை அறிவியல் தியரி கையாளப்பட்டுள்ளது.
பாதி நாளில் முடிக்கக்கூடிய பக்கா சீரிஸ் டார்க்