கவின் : தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை - விஜய் பிறந்தநாளில் பிறந்த ரசிகனின் கதை! Twitter
சினிமா

கவின் : தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை - விஜய் பிறந்தநாளில் பிறந்த ரசிகனின் கதை!

சென்னை லயோலா கல்லூரியில் வேதியியல் படித்துக்கொண்டிருந்த கவினுக்கு சினிமா மீதோ, தொலைக்காட்சி மீதோ எந்த தனிப்பட்ட ஆர்வமோ, நெருக்கமோ இல்லை. ஆனால் அவர் எப்படி இன்று தமிழ் சினிமாவின் நட்சத்திரமாக உருவாகியிருக்கிறார்.

Antony Ajay R

நடிகர் விஜயின் பிறந்தநாளான இன்று அவரது தீவிர ரசிகர்களில் ஒருவருக்கும் பிறந்தநாள். இவரும் ஒரு பிரபல நடிகர். இவரது நடிப்பும் பாவனைகளும் கொஞ்சமாக விஜய்யைப் பார்ப்பது போலவே இருக்கும்.

சரியாக கணித்திருப்பீர்கள் (எப்படியும் தலைப்பில் பெயரைப் படித்திருப்பீர்கள்) அவர்தான் விஜய் டிவி கவின். திருச்சியில் சாதாரணமாக தொடங்கிய அவரது வாழ்க்கை எப்படி பெரிய சினிமா பிரபலம் என்ற இடத்துக்கு வந்தது எனப் பார்க்கலாம்.

பள்ளியில் கவின் பெரிய படிப்பாளியெல்லாம் கிடையாது தான். சுமாரான மாணவராகவே இருந்தார். சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்பதெல்லாம் அவரது எண்ணமாக இல்லை.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைக் காரணமாக சென்னைக்கு வந்தார். லயோலா கல்லூரியில் கெமிஸ்ட்ரி படிக்கதான் சேர்ந்தார்.

முதல் மீடியா அனுபவம்

தனியார் எஃப்.எம் ஒன்றில் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது சேர்ந்தார் கவின். மீடியா அவருடைய உள்ளுணர்வுக்கு நெருக்கமானதாக இருந்தது.

ஏதோ ஒருவகையில் பெரும்பான்மை மக்களுடன் நாம் இணைந்திருக்கிறோம் என்ற உணர்வு அவருக்கு பிடித்திருந்திருக்கிறது. நாம் இவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதற்கு பணம் கொடுக்கும் ஒரு துறை மீடியா தான் என எண்ணியுள்ளார்.

இதனால் தொடர்ந்து கல்லூரிகளில் எடுக்கப்படும் ஷார்ட் ஃபிலிம்களில் நடித்து வந்துள்ளார். கல்லூரிகளைத் தாண்டியும் குறும்படங்களில் நடிக்க இவருக்கு அழைப்புகள் வந்தது.

இவர் வேதியியல் மாணவர் என்றாலும் விசுவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். இவர் நடித்த ஒரு ஷார்ட் ஃபிலிம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

அது குறித்து ஆனந்த விகடன் வார இதழில் எழுதப்பட, மிகவும் மெய்சிலிர்த்துப்போனார். அப்போது கவினுக்கு 21 வயது. தான் செயல்படப்போவது மீடியாவில் தான் என அப்போதுதான் முடிவு செய்தார்.

ஆனால் சில நாட்களில் ஒரு துயரமான சம்பவம் நடைபெற்றது. கவினின் அப்பா வெளிநாட்டில் வெல்டராக வேலை செய்பவர். அவரது குடும்பபத்தில் அக்கா, அம்மாவுடன் 4 பேர் இருந்தனர்.

குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று வந்துகொண்டிருக்கும் போது காரில் முன்னாள் அமர்ந்திருந்த அக்காவை பின்னால் வரசொல்லி கவின் முன்னாள் இருந்து வேடிக்கைப் பார்த்தபடி வந்துள்ளார்.

துரதிஷ்டவசமாக அவர்களின் கார் பெரிய விபத்தை சந்தித்தது. காரின் முன்பகுதி சேதமடைந்தது. கவினின் கால் முட்டி திரும்பிவிட்டது. அவரது இடுப்பு எலும்பு தீவிரமாக பாதிப்படைந்தது.

5,6 மாதங்கள் கழித்து அந்த விபத்தில் இருந்து மீண்டுவந்த கவினுக்கு கனா காணும் காலங்கள் மற்றும் சில நிகழ்ச்சிகளின் ஆடிஷன்கள் குறித்து தெரியவருகிறது.

அவற்றில் பல சொதப்பல்கள், நிராகரிப்புகளுக்கு பிறகு கனா கானும் காலங்களில் நடிக்க தேர்வாகிறார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது.

அடுத்ததாக சரவணன் மீனாட்சியில் கலக்க விஜய் டிவி கவினாக ஆகிறார். அதன் பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது.

"நட்புனா என்னன்னு தெரியுமா?" என்ற படத்தில் அவர் நடிக்கிறார். ஆனால் 3 ஆண்டுகளாக அந்த படம் வெளியாகவில்லை. அவ்வளவு தான் நம் கனவு எல்லாமே தகர்ந்துவிட்டது என ஒடிந்துப்போகிறார்.

கனா காணும் காலங்கள் தொடரை இயக்கியவர் நெல்சன் திலீப் குமார். அவரிடமே மீண்டும் அசிஸ்டன்டாக டாக்டர் படத்தில் இணைந்தார்.

அந்த நேரத்தில் கவினுக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இப்போது உள்ள 2கே கிட்ஸ்கள் மத்தியில் கவின் பிரபலமானது பிக்பாஸில் தான்.

அதன் பிறகு லிஃப்ட் திரைப்படத்தில் நடித்தார். ஹாட்ஸ்டார் ஓடிடியில் லிஃப்ட் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் பெரிய திரையில் கவினை ரசிகர்கள் பார்த்தது டாடா படத்தில் தான். இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த ஹீரோவாக ஆகாஷ் வானி என்ற வெப் சீரிஸிலும் கலக்கியுள்ளார்.

இன்னும் பெரிய இடங்களை அவர் அடைவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அட்வான்ஸாக வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுவோம்.

#HappyBirthDayKavin

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?