வெந்து தணிந்தது காடு Twitter
சினிமா

”ஒருவரது உடல் தோற்றத்தை விமர்சிக்காதீர்கள்” - நடிகர் சிம்பு வேண்டுகோள்

இதனை தான் ஒரு வேண்டுகோளாக முன்வைப்பதாக கூறிய சிம்பு யாரையும் தனிப்பட்ட முறையில் புண்படுத்த வேண்டாம் எனவும் அவர் விழாவில் பேசினார். சிம்புவின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது

Keerthanaa R

"ஒருவரது உடல் வாகை வைத்து யாரையும் விமர்சிக்காதீர்கள்" என நடிகர் சிலம்பரசன் பத்திரிக்கையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த 15 ஆம் தேதி வெளியானது. சிம்பு, சித்தி இத்னானி, நீரஜ் மாதவ், அப்புக்குட்டி ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். 

படம் வெளியாகி ஐந்து நாட்கள் கடந்துள்ள நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.  படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முக்கியமாக மல்லிப்பூ பாடல், கடந்த மூன்று நாட்களாக டிரெண்டிங்கில் உள்ளது. பாடலின் வெற்றியை தொடர்ந்து கவிஞர் தாமரையும் பாடல் எழுதப்பட்ட கதையை பகிர்ந்திருந்தார். 

இந்நிலையில் நேற்று வெந்து தணிந்தது காடு படக்குழுவின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. அப்போது பேசிய சிம்பு, வழக்கமாக வெளியாகும் கமர்ஷியல் படங்களை போல இந்த படம் இல்லை. ஆனால் அதற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

இந்த சந்தோஷத்திற்கு காரணம் நான் கடந்து வந்த வலிகள் தான் என்றும், அதனை நீங்கள் எல்லோரும் உடன் இருந்து பார்த்துள்ளீர்கள் என்றும் சிம்பு தெரிவித்தார். 

"சினிமாவில் வருவது போல, ஒரு ஹீரோ டோட்டலாக காலியாகி, மீண்டும் எழுந்து வருவது போல இருக்கிறது" எனவும் தெரிவித்தார். 

இரண்டாம் பாகமும் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று இயக்குநரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Simbu

இந்த முறை என்னைப்பற்றி எழுத இவர்களுக்கு எதுவும் இல்லை. எப்போதும் என் உடலை விமர்சித்து சிலர் எழுதுவார்கள்...நீங்கள் இல்லை! அந்த சிலர் யாரென்று உங்களுக்கு தெரியும் என்று கூறிய சிம்பு, 

"ஒரு படத்தை விமர்சனம் செய்யலாம். ஒரு தனிப்பட்ட மனிதன, அவங்களோட உருவத்த விமர்சனம் பண்றது ரொம்ப தப்பு! என்னால எடுத்துக்க முடியும், நிறைய பேரால எடுத்துக்க முடியாது!" என்றார். இதனை தான் ஒரு வேண்டுகோளாக முன்வைப்பதாக கூறிய அவர் யாரையும் தனிப்பட்ட முறையில் புண்படுத்த வேண்டாம் எனவும் பேசினார்.

சிம்புவின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?