Ajith Kumar: 'AK Moto Ride' பைக் சுற்றுலா நிறுவனம் தொடங்கிய நடிகர் அஜித்! Twitter
சினிமா

Ajith Kumar: 'AK Moto Ride' பைக் சுற்றுலா நிறுவனம் தொடங்கிய நடிகர் அஜித்!

Keerthanaa R

AK Moto Ride என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார் நடிகர் அஜித். இந்த நிறுவனம் பைக் ரைடர்கள், சாகச பிரியர்கள், பயணக்காதலர்களுக்கானதாக இருக்கும் என நடிகரின் தரப்பில் அறிவிப்பு வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் ஒரு பைக் பிரியர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு பக்கம் சினிமா மீது கவனம் செலுத்தினாலும், மறுபக்கம் தனது பேஷன்களுக்கும் டைம் ஒதுக்கி வந்தார். ஃபோட்டோகிராபி, சமைப்பது, ரேஸ்களில் பங்கேற்பது என பன்முகம் கொண்டிருந்தார் அஜித்.

கடந்த 2022ஆம் ஆண்டு நடிகர் அஜித் உலகைச் சுற்றி ஒரு பைக் டூர் மேற்கொண்டார். இதில் அவருடன் துணிவு படத்தில் நடித்த நடிகை மஞ்சு வாரியர் கூட இணைந்தார்.

நடிகர் அஜித் மீண்டும் பைக் டூர் செல்லவிருக்கிறார். இயக்குநர் மகிழ் திருமேணியின் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், நவம்பர் 2023ல் தனது Mutual Respect டூரின் இரண்டாம் கட்டத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

இந்நிலையில், நடிகரின் தரப்பில் இருந்து புதிய அறிவிப்பு ஒன்று வந்துள்ளது.

நடிகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் ஒரு பைக் சுற்றுலா நிறுவனம் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில்,

“மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும்.” என்றிருந்தது.

மேலும், “ பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்து, உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும்.

தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள்.” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?