”இந்தியா தான் எனக்கு எல்லாம்” எனக் கூறி, தனது கனடிய பாஸ்போர்ட்டை கைவிடுவதாக தெரிவித்திருக்கிறார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.
பல ஆண்டுகளாகவே பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது கனடிய குடியுரிமைக்காக விமர்சிக்கப்பட்டு வருகிறார். சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், இது பற்றி பேசிய அக்ஷய் குமார் இந்த விமர்சனங்கள் தன்னை வருத்ததிற்கு உள்ளாக்குவதாக மனம் திறந்துள்ளார்
ஹேரா பேரி, ஓ மை காட், டாய்லெட், பேட்மேன் போன்ற பாலிவுட் படங்களில் நடித்தவர் அக்ஷ்ய குமார். இவர் தமிழில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இந்தி வெர்ஷன், பூல் புலைய்யா படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
தமிழில் இயக்குநர் சங்கரின் எந்திரன் இரண்டாம் பாகமான 2.0வில் ரஜினிகாந்திற்கு வில்லனாக நடித்திருந்தார் அக்ஷய்.
காமடி, காதல், தேசப்பற்று திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் அக்ஷய். எனினும், ஒரு சமயத்தில் தனது கெரியரில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் இவரும் மனமுடைந்திருந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு நேர்காணலை ஏற்பாடு செய்திருந்தது ஏ என் ஐ செய்தி நிறுவனம். அதில் அக்ஷய் குமார் மோடியை இண்டெர்வியூ செய்திருந்தார்
ஆனால், அதே ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் வாக்களிக்கவில்லை. இதற்கு கனடா நாட்டு குடியுரிமை தான் காரணம் என சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்தன.
அதற்கு விளக்கமளிக்கும் விதமாக
” 90களில் எனது 15 படங்கள் தொடர் தோல்வியடைந்தன. சம்பாதிக்கவேண்டும், அதற்கு வேலை செய்ய வேண்டும். அப்போது கனடாவில் எனது நண்பர் ஒருவர் இருந்தார். அவர் என்னை அங்கு வேலைக்காக வரச் சொன்னார்.
நான் சென்று விண்ணப்பித்து, உரிமையும் கிடைத்தது” என்றார்.
அதே நேரத்தில் அக்ஷய் குமார் நடித்த இரண்டு படங்கள் வெளிவரத் தயாராக இருந்தது. இரண்டுமே வெளியாகி வெற்றியடைந்து அக்ஷய் குமாரின் மார்க்கெட் வலுபெற, அவர் கனடா செல்லவேண்டிய அவசியம் இருக்கவில்லை.
“சென்று அங்கு உன் வேலையை பார்” என்று தன் நண்பர் தன்னை இந்தியாவிற்கு அனுப்பிவைத்ததாக அக்ஷய் கூறினார்
கிடைத்த இரண்டு படங்களின் வெற்றி அக்ஷய்க்கு மேலும் புதிய வாய்ப்புகளுக்கு கதவுகளை திறந்துவிட, தன்னிடம் கனடா பாஸ்போர்ட் இருந்ததை அவர் மறந்துவிட்டதாக அந்த நேர்காணலில் குறிப்பிட்டார் அக்ஷய்.
”இந்தியா தான் எனக்கு எல்லாம். நான் இன்றுவரை சம்பாதித்தது எல்லாம் இந்த நாடு எனக்கு அளித்தவை. இதற்கு கைமாறு செய்ய எனக்கு வாய்ப்பு இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன். உண்மை என்னவென்று தெரியாமல் சிலர் பேசுவது வேதனையாக இருக்கிறது” என்றார் அக்ஷய்.
தற்போது கனடா பாஸ்போர்ட்டை துறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கிறார் அக்ஷய் குமார்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust