Vijay Twitter
சினிமா

வாரிசு : விஜய் படத்திற்கு புதிய சிக்கல் - அதிகாரிகள் விசாரணை!

Antony Ajay R

முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இதன் கடைசி கட்ட படப்பிடிப்புகள் பூந்தமல்லி அருகில் உள்ள ஈ.வி.பி ஸ்டூடியோவில் நடைபெற்று வருகின்றன.

இந்த படபடிப்பில் சட்டப்பூர்வமான அனுமதி பெறாமல் யானையை நடிக்க வைப்பதாக புகார் எழுந்துள்ளது. செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் படக்குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மிரட்டல் விடுத்ததுடன் கேமரா உள்ளிட்ட உபகரணங்களை உடைத்து சேதப்படுத்தியிருக்கின்றனர்.

இது குறித்து நாசரேத் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விசாரணை நடத்திய காவல்துறையினர் சட்டப்பூர்வமான அனுமதி இல்லாமல் யானையை வைத்து படப்பிடிப்பு நடத்தியதை கண்டறிந்தனர்.

செய்தியாளர்களை கடத்தி மிரட்டியதற்காக வாரிசு படக் குழுவினர் 3 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் முன் அனுமதி பெறாமல் யானையை கோவில் விழாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஷூட்டிங்குக்கு அழைத்து வந்து படப்படிப்பிடிப்பை நடத்தியுள்ளனர். பின்னர் அவசர அவசரமாக ஒரே நாளில் அனுமதிச் சீட்டு வாங்கியிருக்கின்றனர்.

விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு வாரிசு படக்குழுவினருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாரிசு படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்குகிறார். ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?