நாடாளுமன்றத்தில் வைத்து சக எம்பியிடம் தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆஸ்திரேலிய எம்பி ஒருவர். அந்த பெண் எம்பியும் இவரது காதலை ஏற்க, இந்த சுவாரஸ்ய சம்பவம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.
விக்டோரியா மாகாணத்தின் தொழிலாளர் கட்சியின் எம்பி நாதன் லேம்பர்ட். நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு முதன் முறையாக கடந்த மார்ச் 7 ஆம் தேதி பார்லிமெண்ட்டில் உரையாற்றினார்.
அப்போது அங்கு வீற்றிருந்த மற்ற கட்சியினரின் முன்னிலையில், யாரும் எதிர்பாராத விதமாக தனது சக எம்பியும் நீண்ட நாள் காதலியும் ஆன நோவா என்ரிச் என்பவரிடம் “நாம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.
இதைக் கேட்ட மற்றவர்களும் சந்தோஷமாக கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். ”நான் இப்போது மோதிரத்தை உங்களுக்கு தரப்போவதில்லை, அதை ஒரு ரொமாண்டிக்கான தருணத்தில் அளிக்கவிரும்புகிறேன்” எனவும் கூறினார்.
நாடாளுமன்ரம் நடந்துமுடிந்த பின்னர் நாதன் நோவாவுக்கு மோதிரத்தை அளித்ததாகவும், நோவா சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் வியான் நியூஸ் தளம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான நாதன் நோவாவை பல நாட்களாக காதலித்து வந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக பிரப்போஸ் செய்ய சரியான தருணம் கிடைக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் தனது உரையை ஆற்றிக் கொண்டிருக்கும்போது, இதை விட சிறந்த தருணம் கிடைக்காது எனக் கருதி அங்கேயே காதலைச் சொல்லியிருக்கிறார்.
“அழகான பிரஞ்சு ஹாலிடேவோ, அல்லது காலங்காலமாக எல்லோரும் செய்துகொண்டிருப்பது போல பெரிய திட்டங்கள் எல்லாம் இல்லை. இதுவே சிறந்த தருணமாக இருந்தது” என்றார் நாதன்.
நாதன் பிரப்போஸ் செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் நாதன் நோவா ஜோடிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust