யார் இந்த பவா செல்லதுரை? Twitter
சினிமா

பிக்பாஸ் வீட்டிலில் முதல் வாரத்திலேயே கவனம் பெறும் எழுத்தாளர் - யார் இந்த பவா செல்லதுரை?

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களும் அவர் நீண்ட நாள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களும் அவரின் கருத்தை ஆதரித்து தொடர்ந்து நிகழ்ச்சியில் இருக்க வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி இளையதலைமுறையினர் எழுத்தாளருக்கு ஆதரவு கொடுப்பது ஏன்?

Priyadharshini R

‘பிக்பாஸ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஞாற்றுக்கிழமை தொடங்கியது.

இதில் ஐசு (நடனக் கலைஞர்), ஜோவிகா (வனிதா மகள்), அக்ஷயா உதயகுமார், அனன்யா எஸ் ராவ், விஜய் வர்மா, விஷ்ணு விஜய், பாவா செல்லதுரை, விசித்ரா, சரவண விக்ரம் (பாண்டியன் ஸ்டோர்ஸ்), மாயா கிருஷ்ணன், மணி சந்திரா, விஷ்ணு தேவி, பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா , யுகேந்திரன் வாசுதேவன், கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, நிக்சன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

18 பேர் கலந்துகொண்டுள்ள இந்த போட்டியில் பவா செல்லதுரை முதல் வாரத்திலேயே அதிக கவனம் பெற்றுவருகிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததுமே சக போட்டியாளரிடம் வயது காரணமாக தன்னை ‘ஐயா’ என்று அழைக்க வேண்டாம் ‘ப்ரோ’ அல்லது ‘பவா’ என்றே கூப்பிடலாம் என்று மாஸ் செய்தார்.

பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருப்பவர்களும் அவர் நீண்ட நாள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களும் அவரின் கருத்தை ஆதரித்து தொடர்ந்து நிகழ்ச்சியில் இருக்க வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி இளையதலைமுறையினர் இந்த எழுத்தாளருக்கு ஆதரவு தெரிவித்து வர காரணம் என்ன?

யார் இந்த பவா செல்லதுரை?

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பவா செல்லதுரை ஒரு எழுத்தாளர். ‘வம்சி புக்ஸ்’ என்ற பெயரில் புத்தக நிலையம் மற்றும் பதிப்பகத்தை நடத்திவருகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கியப் பிரிவான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் சுமார் 20 ஆண்டுகள் இருந்த பவா 10 ஆண்டுகளுக்கு முன்னர் அந்தச் சங்கத்தில் இருந்து விலகிவிட்டார்.

எழுதுவதோடு நிறுத்திவிடாமல் நடிப்பு, கதை சொல்லுதல் என பல விஷயங்களை செய்து வருகிறார். மிஷ்கினின் ‘சைக்கோ’ மற்றும் ‘ஜோக்கர்’ ஆகிய திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் கதை சொல்லி கண்கலங்க வைக்கும் பவா

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததுமே சக போட்டியாளரிடம் வயது காரணமாக தன்னை ‘ஐயா’ என்று அழைக்க வேண்டாம் ‘ப்ரோ’ அல்லது ‘பவா’ என்றே கூப்பிடலாம் என்று கூறி சக போட்டியாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இது போட்டியாளர்கள் மத்தியில் விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்றது.

அதன் பின்னர் உணவு சமைப்பது பற்றிப் பேசும்போது, பெண்களிடம் நன்றாக சமைக்கிறார்கள் என்று சொல்லக்கூடாது, அப்படி சொல்லிவிட்டால், அவர்கள் சமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள், தங்களது தனித்திறமமைகளை விட்டுவிட்டு, வீட்டில் உள்ளவர்களுக்கு சமைப்பதை மட்டுமே பெரிதாக எடுத்துக்கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இதுவும் பவா செல்லதுரைக்கு மதிப்பை உயர்த்தி கொடுத்தது.

பிறகு அவரின் தனி திறமையான கதை சொல்வதை பிக்பாஸ் வீட்டிற்குள் செய்தார்.

எழுத்தாளர் ஆதவனின் ‘ஓட்டம்’ என்ற சிறுகதையை சக போட்டியாளர்களிடம் சொன்னார் பவா.

அந்த கதை, திருமணமாகி, ஒரு குழந்தைக்குத் தாயான பின், ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி மாறிப்போனது, தனது விளையாட்டை எப்படி தொடர முடியாமல் போனது என்று விவரிக்கிறது.

தனது மகன் டிபன் பாக்ஸ்சை வீட்டில் மறந்து சென்றுவிட்டபோது, ஓடிச்சென்று கொடுக்கிறாள் அந்த பெண். குடும்பம் என்ற ஒரு வட்டத்திற்குள் பெண்களின் கனவு முடக்கிவிடுகிறது என பேசத்தொடங்கினார்.

“உங்கள் யாரையும் திருமணம் செய்து பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லை. நாம் எல்லோரும் கலையோடு சம்பந்தப்பட்டவர்கள். கணவனோ, மனைவியோ, குழந்தையோ ஒருவருக்கு பின்னால் நிற்க வேண்டும். தடையாக நிற்கக்கூடாது” என்று முடித்தார்.

இக்கதையை அவர் சொல்லி முடித்ததும், பிரதீப் ஆண்டனி மற்றும் கூல் சுரேஷ் ஆகிய சக போட்டியாளர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டனர்.

“நீங்கள் நீண்ட நாள் இந்த நிகழ்ச்சியில் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் ” என கண்கலங்கி பிரதீப் ஆண்டனி கூறினார்.

ஆனாலும் வனிதா மகள் ஜோவிகா, விசித்திரா ஆகியோருக்கு பவா சொல்லவரும் கருத்து புரியவில்லை என்றே கூறுகின்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் பலர் அவரை ஆதரித்தாலும் சில அவரின் இயல்பை ஏற்றுகொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் பவா- வை எப்படி பார்க்கிறார்கள்?

பிரிய லக்ஷிதா என்ற டிவிட்டர் பதிவாளர், பவா செல்லதுரை நன்றாகக் கதை சொல்கிறார் என்றும், "பெண்கள் நல்லா சமைக்கிறார்கள் என்று சில ஆண்கள் சொல்லிச் சொல்லியே சமையல் கட்டிலே உட்காரவைத்துவிடுவார்கள்" என்ற அவர் கூறிய கருத்தை ஆதரித்துப் பதிவிட்டிருந்தார்.

சேகர் என்ற ட்விட்டர் பதிவாளர், பவா செல்லதுரை மற்றவர்கள் தன்னை ஐயா என்று அழைக்கதேவையில்லை என்ற கருத்தை வரவேற்பதாகச் சொல்கிறார்.

‘பவா செல்லதுரை ஆர்மி’ என்ற பெயரில் டிவிட்டர் கணக்கு ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அதிலும் அவரைப் பற்றிய ஆதரவுக் கருத்துக்கள், படங்கள் ஆகியவை வெளியாகி வருகின்றன.

இப்படி அவருக்கு வரவேற்புகள் கிடைத்தாலும் மறுபுறம் அவரை விமர்த்து தான் வருகின்றனர்.

பவா செல்லதுரை கதைசொல்வதுக்கு ரசிகரான செல்வம், இந்த நிகழ்வின் மூலமாக பவா செல்லத்துரையின் மீதான நன்மதிப்பு குறைந்துபோகும் என்று விமர்சிக்கிறார்.

மிகவும் எளிமையான மனிதர் இவர். ஆனால் இவர் தற்போது தேர்வு செய்துள்ள தளம் இவருக்கு ஏற்றது அல்ல எனவும் பேசிப் பேசி கூல் சுரேஷை இலக்கியவாதியா மாற்ற போயிருக்கிறார் எனவும் பல விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

எத்தனை வாரங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?