Leo : சர்ச்சையில் சிக்கிய லியோ பட பாடல்; நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் - என்ன நடந்தது? Twitter
சினிமா

Leo : சர்ச்சையில் சிக்கிய லியோ பட பாடல்; நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் - என்ன நடந்தது?

Priyadharshini R

சமீபத்தில் வெளியான லியோ பட பாடல் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக கூறி சர்ச்சை எழுந்த நிலையில் நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

லியோ படத்தின் முதல் பாடலான "ஆல்டர் ஈகோ நான் ரெடி" பாடல் கடந்த 22ம் தேதி விஜய் பிறந்தநாளை ஒட்டி வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்த பாடல் 31 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். அவருடன் அசல் கோளாரும் 'ராப்' செய்திருக்கிறார்.

இந்த பாடலின் முதல் புகைப்படம் போதே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான ஆர்.டி.ஐ செல்வம், சமீபத்தில் வெளியான லியோ பட பாடல் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் இருப்பதாக ஆன்லைன் மூலமாக காவல் நிலையத்திற்கு புகார் மனு அளித்தார்.

மேலும் நீதிமன்றம் மூலமாக மனு அளிக்க இருப்பதாகவும் தகவல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் பனையூர் முகவரி மற்றும் சாலிகிராமம் முகவரிக்கும் ஆர்.டி.ஐ.செல்வம் சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலாமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பியதால் நடிகர் விஜய்யின் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கத்தினர் 500 க்கும் மேற்பட்டோர் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஆர்.டி.ஐ. செல்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?