Cooku with Comali: டைட்டில் வின்னர் சிவாங்கியா? மைம் கோபியா? ட்விட்டர்
சினிமா

Cooku with Comali: டைட்டில் வின்னர் சிவாங்கியா? மைம் கோபியா?

Keerthanaa R

குக்கு வித் கோமாளியில் நான்காவது சீசனின் டைட்டில் நடிகர் மைம் கோபிக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. திரைப்பிரபலங்கள் இதில் பங்கேற்று சமைப்பார்கள். இவர்களுக்கு உதவியாக கோமாளிகள் இருப்பார்கள்.

இதில் பல வித்தியாசமான நகைச்சுவையான டாஸ்குகள் இருவருக்குமே வழங்கப்படும். கூடவே உணவை சமைக்க இவர்களுக்கு சவாலும் விடப்படும்.

மூன்று சீசன்களை கடந்து தற்போது நான்காவது சீசன் நடந்துகொண்டிருக்கிறது. மூன்று சீசன்களாக கோமாளியாக வலம் வந்த சிவாங்கி, இந்த முறை கண்டஸ்டண்டாக பங்கேற்றுள்ளார். இவருக்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நான்காவது சீசனில் சிவாங்கி, விசித்திரா, மைம் கோபி, கிரண், ஸ்ருஷ்டி டாங்கே, ஆண்ட்ரியன் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.

பல சவாலான சுற்றுகளை கடந்து இறுதிச்சுற்றுக்கு இவர்கள் தேர்வாகியுள்ளனர். முதல் இறுதிப்போட்டியாளராக நடிகை விசித்திரா தேர்வானார். இரண்டாவதாக சிவாங்கி, அவரை தொடர்ந்து மைம் கோபி, நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, கிரண் ஆகியோர் தேர்வாகினர்.

முன்பே எலிமினேட் ஆகியிருந்த ஆண்ட்ரியென் வைல்ட் கார்ட் மூலமாக இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்

இந்நிலையில், இந்த சீசனின் டைட்டில் வின்னராக நடிகர் மைம் கோபி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூன்று சீசன்கள் கடந்து முதன்முறையாக ஒரு ஆண் டைட்டில் வென்றுள்ளார்.

இரண்டாவது இடத்தை நடிகை ஸ்ருஷ்டி டாங்கே பெற்றதாகவும் மூன்றாவது இடம் நடிகை விசித்திராவுக்கு கிடைத்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முறை டைட்டில் வின்னராக சிவாங்கி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த செய்தி ட்விஸ்ட் ஆக வந்தமைந்துள்ளது.

இன்னும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?