RRR: மீண்டும் வாகை சூடிய ராஜமௌலி படம் - Critics Choice Awardsல் இரண்டு விருதுகள் Twitter
சினிமா

RRR: மீண்டும் வாகை சூடிய ராஜமௌலி படம் - Critics Choice Awardsல் இரண்டு விருதுகள்

Keerthanaa R

28வது Critics Choice Awardsல் இரண்டு விருதுகளை வென்றுள்ளது ராஜமௌலியிம் ஆர் ஆர் ஆர் திரைப்படம். சிறந்த வேற்று மொழி திரைப்படம் (Best Foreign Language) மற்றும் சிறந்த பாடலாக நாட்டு கூத்து பாடலுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2022 ஆம் மாதம் வெளியான திரைப்படம் ஆர் ஆர் ஆர்.

இந்த படம், அதன் கதைக்களத்தை தாண்டி, தொழில்நுட்பம், திரையில் காட்சிப்படுத்தப்பட்ட விதம் ஆகியவற்றுக்காக பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

முக்கியமாக படம் வெளியாவதற்கு முன்னரே, நாட்டு நாட்டு பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. வித்தியாசமான, துள்ளலான நடனம், இரண்டு பெரும் ஹீரோக்கள் ஒரே திரையில், யாரையும் எழுந்து ஆடவைத்துவிடும் பீட்டுகள் நிறைந்த பின்னணி இசை என பாடல் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளவிலும் ரசிகர்களை வென்றிருந்தது.

இந்த திரைப்படத்தை ஆஸ்கார் விருதுகளுக்கு சமர்பித்தது படக்குழு. ஏற்க மறுத்த நிலையில், சர்ச்சைகளாகி, மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த வாரம், சிறந்த ஒரிஜினல் சாங் என்ற பிரிவில் நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது.

RRR : Naatu Naatu Won Golden Globe for Best Original Song - pics

இந்நிலையில், கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதிலும் இரண்டு விருதுகளை அள்ளியிருக்கிரது ஆர் ஆர் ஆர் திரைப்படம்.

ஆர் ஆர் ஆர் படத்திற்கு சிறந்த வேற்று மொழி திரைப்படம் (Best Foreign Language) என்ற விருதும், நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடல் விருதும் கிடைத்துள்ளது. ரசிகர்களும், படக்குழுவினரும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?