Jailer : இணையத்தை கலக்கும் kaavaalaaa பாடலின் step காப்பியா? Decode செய்த ரசிகர்கள் Twitter
சினிமா

Jailer : இணையத்தை கலக்கும் kaavaalaaa பாடலின் step காப்பியா? Decode செய்த ரசிகர்கள்

Priyadharshini R

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர்.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், வசந்த் ரவி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் ஜெயிலர் படத்திலிருந்து காவாலா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலை ஷில்பா ராவ் பாடியுள்ளார்.

இந்தப் பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இந்தப் பாடல் வெளியான முதலே தமன்னாவின் ஸ்டெப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ரசிகர்கள் இந்தப் பாடலை ரீல்ஸாக பகிர்ந்து வைப் செய்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் இந்த பாடல் நல்ல வைப் மெட்டிரியல் என்று மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்தப் பாடலின் நடனம் ஷகிராவின் திஸ் டைம் ஃபார் ஆஃப்ரிகா பாடல் போலவும் தமன்னாவின் தோற்றம் ஷிகிரா போல இருப்பதாகவும் அந்தப் பாடலின் ஆடியோவை காவாலா பாடல் வீடியோவுடன் இணைத்து பகிர்ந்து வருகின்றனர்.

ஒருவேளை அந்தப் பாடலை இயக்குநர் நெல்சன் இன்ஸ்பிரேஷனாக சொல்லியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இருந்தாலும் இணையத்தில் இந்த பாடலின் நடனம் காப்பி அடித்ததாக இணையவாசிகள் சொல்லி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?