KGF -ஐ விஞ்சிய கந்தாரா ! - அதிகபட்ச ரேடிங் பெற்ற இந்தியப் படம்! Twitter
சினிமா

KGF -ஐ விஞ்சிய கந்தாரா ! - அதிகபட்ச ரேடிங் பெற்ற இந்தியப் படம்!

Antony Ajay R

தமிழ் ரசிகர்களை பிற மொழிப் படங்கள் ஈர்த்து வருவது நாளுக்கு நாள் பெருகியிருக்கிறது. 'பிரேமம்', 'பாகுபலி', 'கேஜிஎஃப்' படங்களின் வரிசையில் பெருவெற்றி பெற்றுவருகிறது கந்தாரா திரைப்படம்.

கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி, விமர்சகர்களாளும் ரசிகர்களாலும் இந்த படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கான திரைகள் இரண்டு வாரங்கள் கழித்தும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

கந்தாரா படத்திற்கு கர்நாடகாவில் மட்டுமில்லாமல் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்த படத்தின் இந்தி டப்பிங் அக்டோபர் 14ல் வெளியானது. அக்டோபர் 15ல் தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் வெளியாகியிருக்கிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற இடங்களில் குறிப்பிடத்தக்க திரைகள் கந்தாராவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இந்திய அளவில் அதிக ஐ.எம்.டி.பி ரேடிங் பெற்ற படங்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது கந்தாரா. கேஜிஎஃப் 2 முதல் நாயகன் வரை அதிகபட்சமாக இந்தியப் படங்கள் 8.4 ரேடிங் தான் பெற்றிருக்கின்றன. ஆனால், கந்தாரா 9.5 ரேடிங் கொண்டுள்ளது.

ஐ.எம்.டி.பி பயனர்களால் கொடுக்கப்பட்டுள்ள இந்த ரேடிங் மாறவும் கூடும்.

இந்த படம் குறித்து நடிகர் தனுஷ் "பிரமிக்க செய்கிறது" என ட்வீட் செய்திருந்தார்.

மேலும் தெலுங்கு நடிகர் ராணாவும் இந்த படத்தை வாழ்த்தியிருந்தார்.

இந்த படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி இதற்கு முன்னர் கருட கமன ரிஷப வாகன படத்தை இயக்கி, நடித்து கவனம் பெற்றார். கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹோம்பெல் பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?