ஜெயிலர் : சென்னைக்கு FDFS பார்க்க வந்த ஜப்பான் ரசிகர் - ரஜினியை சந்தித்தது எப்படி? Twitter
சினிமா

ஜெயிலர் : சென்னைக்கு FDFS பார்க்க வந்த ஜப்பான் ரசிகர் - ரஜினியை சந்தித்தது எப்படி?

பாபா திரைப்படம் முதல் கடந்த 20 ஆண்டுளுக்கும் மேலாக ரஜினியின் படத்திற்கு FDFS-க்கு சென்னைக்கு வருவதை வழக்கமாக்கியுள்ளார். காலா, கபாலி, தர்பார் உள்ளிட்ட திரைப்படங்களையும் இங்கு வந்து பார்த்துள்ளார்.

Priyadharshini R

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.இந்த படத்தில் மம்மூட்டி, சுனில், ஜாக்கி ஷ்ராப், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் திரைப்படம், தமிழ் நாட்டில் மட்டும், 600 முதல் 700 திரையரங்குகளில் இன்று வெளியானது.

இதனையடுத்து ரசிகர்கள் ”ஜெயிலர்” ஹேஷ்டேகுகளை சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் ஜப்பான் ரசிகர் ஒருவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் இருப்பவரின் பெயர் யசுதா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி திரைப்படத்தின் முதல் காட்சியை பார்ப்பதற்காக சென்னை வருவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில், தற்போது “ஜெயிலர்” திரைப்படத்திற்கும் தன் மனைவியுடன் சென்னை வந்துள்ளார். ஜப்பானைச் சேர்ந்த அவர் ரஜினி ரசிகரானது எப்படி?

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் இயங்கும் ஹோட்டல் ஒன்றில் ரிசப்ஷனிஸ்டாக பணி புரிந்து வருபவர் யசுதா. ஜப்பானில் ”முத்து” திரைப்படம் வெளியான போது அதனை திரையரங்கில் கண்டு ரசித்துள்ளார். அதன் பின்னர் ரஜினிக்கு ஃபேன் ஆகியுள்ளார்.

அவரின் பழைய திரைப்படங்களை எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்து ரசிக்க ஆரம்பித்துள்ளார்.

அதோடு நிறுத்தாமல், சூப்பர் ஸ்டார் பற்றி நிறைய படித்துத் தெரிந்துகொண்டுள்ளார். திரைப்படங்களில் மட்டும் ரசிக்காமல், வெளி நிகழ்ச்சிகளுக்கு விக் எதுவும் இல்லாமல், மேக்கப் எதுவும் இல்லாமல் வருவது கண்டு, அவரது எளிமையின் மீது வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளார்.

பாபா திரைப்படம் முதல் கடந்த 20 ஆண்டுளுக்கும் மேலாக ரஜினியின் படத்திற்கு FDFS-க்கு சென்னைக்கு வருவதை வழக்கமாக்கியுள்ளார். காலா, கபாலி, தர்பார் உள்ளிட்ட திரைப்படங்களையும் இங்கு வந்து பார்த்துள்ளார்.

ரஜினியை முதன் முதலில் சந்தித்தது எப்படி?

இத்தனை முறை சென்னை வந்திருந்தாலும் ரஜினியை நேரில் சந்திக்க வேண்டும் என்று அவர் எண்ணியுள்ளார்.

போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே நடை பயிற்சி மேற்கொள்வார் எனக் கேள்விப்பட்ட யசுதா அங்கு சென்று ரஜினிக்காக காத்துக்கொண்டிருந்தார்.

ஒரு நாள் யசுதா எதிர்பார்த்தபடியே ரஜினி நடை பயிற்சி செய்ய வெளியே வந்திருக்கிறார். நேரில் சென்று தன்னை தானே ரஜினியிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட யசுதா, அவரின் ரசிகர் என்றும் தெரிவித்திருக்கிறார். அதன் பின்னர் அவருடன் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

யசுதா ஜப்பானில் இயங்கிவரும் ரஜினி ரசிகர் மன்றத்தின் மூலம் நிறைய நலப் பணிகள் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?