Lokesh Twitter
சினிமா

"தளபதி 67 பத்தி கேக்காதீங்க!" - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி

Keerthanaa R

தளபதி 67 குறித்த அப்டேட்டை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பவர்களிடம் இன்னும் கொஞ்சம் பொறுங்கள். வாரிசு படம் முடியாமல், தளபதி 67 குறித்து எதுவும் சொல்ல முடியாது என சொல்லியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ். 

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் உச்சத்தை தொட்ட இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர், கைதி, மாஸ்டர் படங்கள் மூலம் தொடர்ந்து ஹேட் டிரிக் அடித்தார். இவரது அடுத்த இலக்காக இருந்தது, உலக நாயகன் கமலை வைத்து ஒரு படம் எடுப்பது. 

Vikram Stills

உலக நாயகனுக்காக, ஒரு ஃபேன் பாயாக இந்த கதையை எழுதியிருக்கிறேன் எனக் கூறி, விக்ரம் திரைப்படத்தை இயக்கினார் லோகேஷ். ஜூன் மாதம் வெளியாகி, 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது விக்ரம். இந்நிலையில், விக்ரம் திரைப்படம் வெளியானபோது, மார்வெல் யுனிவர்ஸ் போல, லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்கவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். 

அதன் முதல் முயற்சியாகவே விக்ரம் படம் பார்க்கும் முன் கைதி பார்த்துவிட்டு வர சொல்லியிருந்தார் இயக்குநர். விக்ரம் படத்தில் கைதி ரெஃபரன்ஸும் இருந்தது. 

தற்போது மீண்டும் தளபதி விஜய்யுடன் இணைக்கிறார் லோகேஷ். இந்த படமும் LCUவின் அங்கமாக இருக்கும் என்பது ரசிகர்களின் கணிப்பு.

விஜய்யுடன் இணையப்போவதாக கூறிய கொஞ்ச நாட்களிலேயே தான் சிறிது காலம் சமூக வலைத்தளங்களிலிருந்து பிரேக் எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார் லோகேஷ். மீண்டும் வரும்போது அடுத்த படங்கள் குறித்த அப்டேட்களை தருவதாகவும் சொல்லியிருந்தார். இந்நிலையில், இயக்குநர் எங்கு சென்றாலும் தளபதி 67 குறித்த கேள்விகள் எழுவதால், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிலளித்திருக்கிறார் லோகி.

Lokesh Kanagaraj

"தொடர்ந்து 3,4 மாதங்களாக எல்லாரும் இதை தான் கேட்கிறீர்கள். இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள். அப்டேட்ஸ் வரும்; வாரிசு படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் இருப்பதால், அது வெளிவராமல் தளபதி 67 பற்றி எதுவும் சொல்லமுடியாது" எனக் கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். 

ஆனால், இது தளபதி 67 குறித்த கேள்விகளை நிறுத்துமா என்பது நிச்சயமாக தெரியவில்லை. விஜய் பிரபல தெலுங்கு பட இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?