Siddique: விஜய்யின் ’பிரண்ட்ஸ்’ பட இயக்குநர் சித்திக் மரணம் - திரைத்துறையினர் இரங்கல் ட்விட்டர்
சினிமா

Siddique: விஜய்யின் ’பிரண்ட்ஸ்’ பட இயக்குநர் சித்திக் மரணம் - திரைத்துறையினர் இரங்கல்

Keerthanaa R

பிரபல இயக்குநர் சித்திக் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமானார். இவருக்கு வயது 63. திரைத்துறையினர் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மலையாள திரைத்துறையின் முன்னணி இயக்குநர் சித்திக். இவர் 1986ஆம் ஆண்டு வெளியான, ‘பாப்பன் பிரியப்பட்ட பாப்பன்’ என்ற திரைப்படம் மூலம் கதாசிரியராக சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தன் வித்தியாசமான கதைக்களத்திற்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.

மோகன்லால் நடித்த நாடோடிக்கட்டு திரைப்படத்தின் கதையையும் இவர் தான் எழுதினார்.

அதன் பின்னர் 1989ல் ’ராமோஜி ராவ் ஸ்பீக்கிங்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆக உருவெடுத்தார்.

நடிகர் விஜய், சூர்யா, தேவயாணி நடித்த பிரண்ட்ஸ் திரைப்படம் சித்திக் இயக்கத்தில், 2001ல் வெளியானது. இத்திரைப்படம் மூலம் கிடைத்த நேசமணி என்ற வடிவேலுவின் கதாபாத்திரத்தை தமிழ் சினிமா இன்றளவும் கொண்டாட காரணம் இவரே!

இதை தவிர தமிழில் எங்கள் அண்ணா, சாது மிரண்டா , காவலன் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை திரைப்படங்களையே இயக்கினார் சித்திக். இவரது திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் மக்களால் போற்றப்படுகின்றன.

மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இவர் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் இயக்கிய பிக் பிரதர் என்ற மலையாள திரைப்படம் வெளியானது.

நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சித்திக்

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட திரைத்துறையினர் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?