AR Rahman: ”இந்தி வேண்டாம் தமிழில் பேசுங்க” மேடையில் மனைவியை செல்லமாக அதட்டிய இசைப்புயல்? Twitter
சினிமா

AR Rahman: ”இந்தி வேண்டாம் தமிழில் பேசுங்க” மேடையில் மனைவியை செல்லமாக அதட்டிய இசைப்புயல்?

மேலும், இந்தி படங்களுக்கு தான் இசையமைக்கும் வாய்ப்புகள் வந்தபோது, அவர் அங்கு சற்றே தரக்குறைவாக நடத்தப்பட்டதாகவும் பேசியிருந்தார். அங்கு ஒரு கும்பலே தனக்கு எதிராக செயல்படுவதாக அவர் கூறியிருந்தார்

Keerthanaa R

சமீபத்தில் நடந்த சினிமா விகடன் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், தன் மனைவி பேசத் தொடங்கும்போது, “இந்தியில் பேசாதே தமிழில் பேசு” என செல்லமாக எச்சரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இந்தி மொழி பேசுவதற்கு எதிர்ப்பு சற்று வலுவாகவே இருக்கிறது. தமிழை போல அதுவும் ஒரு மொழி தான் என்றாலும், திணிக்கப்படுவதாக, வலுக்கட்டாயமாக பேசவைப்பதாக அம்முயற்சிகள் இருப்பதால் தான் இந்த வெறுப்பு என்றும் கூறலாம்.

தமிழ்நாட்டில் இந்தியை எதிர்ப்பவர்களில் முக்கியமான ஒரு நபர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். இந்தி வேண்டாம் என நேரடியாக சொல்லாவிட்டாலும், தமிழ் மொழி மீதான ஈடுபாட்டை பல நேர்காணல்களில், பேட்டிகளில் ஏ ஆர் ரஹ்மான் வெளிகாட்டியிருக்கிறார்.

தனது சொந்த படமான 99 சாங்க்ஸ் புரொமோஷன் விழாவின் போது, தொகுப்பாளர் மேடையில் இந்தியில் பேசிய போது, “அய்யோ இந்தியா” என சிரித்தபடி மேடையில் இருந்து இறங்கினார் ரஹ்மான்.

மேலும், இந்தி படங்களுக்கு தான் இசையமைக்கும் வாய்ப்புகள் வந்தபோது, அவர் அங்கு சற்றே தரக்குறைவாக நடத்தப்பட்டதாகவும் பேசியிருந்தார். அங்கு ஒரு கும்பலே தனக்கு எதிராக செயல்படுவதாக அவர் கூறியிருந்தார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா இந்தி இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்கவேண்டும் எனக் கூறியிருந்தார். இது குறித்து வினவியபோது, ஏ ஆர் ரஹ்மான், நிருபரிடம், ”தமிழ் தான் இணைப்பு மொழி” எனக் கூறிய வீடியோ வைரலானது.

இதனையெல்லாம் தொடர்ந்து, சமீபத்தியை நிகழ்ச்சி ஒன்றில், இந்தி குறித்து ரஹ்மான் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா விகடன் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. அதில் தனது மனைவி சைரா பானுவுடன் கலந்துகொண்டார் ரஹ்மான். அப்போது பேசியவர், “வழக்கமாக எனது நேர்காணல்களை நான் மறுமுறை பார்க்கமாட்டேன். ஆனால் எனது குரல் நன்றாக இருக்கிறது என்று கூறி மீண்டும் மீண்டும் என் மனைவி பார்ப்பார்” எனக் கூறினார்

அப்போது தொகுப்பாளர், ஏ ஆர் ரஹ்மானின் மனைவியிடம் பேசச்சொல்லி, மைக்கை கொடுத்தார். மனைவி பேசத் தொடங்கும் முன் ரஹ்மான், “இந்தியில் பேசாதீங்க, தமிழில் பேசுங்க ப்ளீஸ்” என்றார்.

இதனை கேட்டு அவரது மனைவி உட்பட அனைவரும் கலகலவென சிரித்தனர். ரசிகர்கள் ஆர்ப்பரித்து கூச்சலிட்டனர். பிறகு பேசிய ரஹ்மானின் மனைவி, “என்னை மன்னியுங்கள், அவ்வளவு சரலமாக என்னால் தமிழில் பேச முடியாது. எனக்கு அவரது குரல் மிகவும் பிடிக்கும். அவரது குரலைக் கேட்டு தான் அவர் மீது காதலில் விழுந்தேன்” என்றார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?