Shriya Saran : த்ரிஷ்யம் 2 வெற்றி பெற்றாலும் மன உளைச்சலில் இருக்கும் ஷ்ரேயா - ஏன்? Twitter
சினிமா

Shriya Saran : த்ரிஷ்யம் 2 வெற்றி பெற்றாலும் மன உளைச்சலில் இருக்கும் ஷ்ரேயா - ஏன்?

சமீபத்தில் இந்தியில் வெளியான த்ரிஷ்யம் 2 திரைப்படம் ஷ்ரேயாவுக்கு மிகப் பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. ஷ்ரேயா மட்டுமல்லாது மொத்த பாலிவுட்டும் த்ரிஷ்யம் 2 வெற்றியைக் கொண்டாடி வரும் சூழலில் தனக்கு நடந்த மோசமான அனுபவத்தைக் குறித்துக் மனம் திறந்துள்ளார் ஷ்ரேயா.

Antony Ajay R

நடிகை ஷ்ரேயா சரண் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். திருமணத்துக்கு பிறகான இடைவெளி, லாக் டவுனைத் தொடர்ந்து மீண்டும் சில படங்களில் நடித்து வந்தார் ஷ்ரேயா. ஆனால் சரியான கதாப்பாத்திரங்கள் கிடைக்காததால் அவரது கம் பேக் மிஸ்ஸாகி வந்தது.

சமீபத்தில் இந்தியில் வெளியான த்ரிஷ்யம் 2 திரைப்படம் ஷ்ரேயாவுக்கு மிகப் பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. ஷ்ரேயா மட்டுமல்லாது மொத்த பாலிவுட்டும் த்ரிஷ்யம் 2 வெற்றியைக் கொண்டாடி வரும் சூழலில் தனக்கு நடந்த மோசமான அனுபவத்தைக் குறித்துக் மனம் திறந்துள்ளார் ஷ்ரேயா.

ஷ்ரேயா தனது கணவருடன் அடிக்கடி வெளியில் தோன்றுவார். இன்ஸ்டாகிராமில் இருவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகளை பதிவிட்டு மகிழ்வர். பொது இடங்களில் இருவரும் அடிக்கடி முத்தமிட்டுக் கொள்வர். இந்த தருணங்களில் சில ஆராவாரமும் கேலியும் செய்தாலும் அதனை நகைச்சுவயாக எடுத்துக்கொள்வர்.

ஆனால் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள முடியாத சில கமன்ட்களும் கிண்டல்களும் வருவதாக சமீபத்தில் கொடுத்த நேர்காணலில் கூறியுள்ளார். இதனால் அவரது கணவர் அன்டேரி கொஸ்சீவ் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் கூறியுள்ளார்.

"பொதுவாக நாங்கள் நகைச்சுவையாக, இனிமையாக வரும் கமன்ட்கள் குறித்து விவாதிப்போம். ஆனால் சில கமன்ட்கள் "நீ ஏன் வெள்ளைக்காரானை திருமணம் செய்தாய்?" என்பது போல வருகின்றன. இது என் காணவரை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது" என்று கூறியுள்ளார் ஷ்ரேயா.

மேலும், "அப்போதிருந்து எங்களைப் பற்றி எழுதுவது எதையும் நாங்கள் படிப்பதில்லை. எங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் தவிர மற்றவர்கள் எழுதும் எதையும் நாங்கள் கண்டுகொள்வதில்லை" என்றும் கூறினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?