Bigg Boss ஜி.பி.முத்து : மீண்டும் போட்டிக்கு திரும்புவாரா? Twitter
சினிமா

Bigg Boss ஜி.பி.முத்து : மீண்டும் போட்டிக்கு திரும்புவாரா?

Antony Ajay R

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பிரபல டிக் டாக்கர் மற்றும் யூடியூர் ஜி.பி.முத்து விலகியது ரசிகர்கள் மனதை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஜிபி முத்து, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் வசிப்பவர். டிக்டாக் இருந்த காலகட்டத்தில், அதில் செய்த வீடியோக்கள் மூலம் பிரபலமான ஜிபி முத்து, டிக்டாக் தடைசெய்யப்பட்ட பிறகு, யூடியூபில் வீடியோக்கள் மூலம் தனது ரசிகர்களிடம் தொடர்புகொள்ள ஆரம்பித்தார்.

குறிப்பாக, அவருக்கு வந்து குவியும் கடிதங்களை அவர் படிக்கும் வீடியோக்கள், ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவை. மேலும், சன்னி லியோன் நடிக்கும் 'ஓ மை கோஸ்ட்' எனும் திரைப்படத்திலும் ஜி.பி.முத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை வெகுஜன வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் போட்டி ஆரம்பித்த சில நாட்களிலேயே அவர் வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. வெளியேறினாலும் ரசிகர்களை மனதை வெல்ல ஜி.பி.முத்து மறக்கவில்லை.

சமூக வலைத்தளங்களில் ஜி.பி.முத்துவுக்கு ஆதரவான பதிவுகளை நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். தனது மகனுக்கு வலிப்பு நோய் இருப்பதனால் தான் விளையாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக ஜி.பி.முத்து கூறினார்.

புகழ் பணத்தை வீட குடும்பமும் உறவுகளும் தான் முக்கியம் என ஜி.பி.முத்து எடுத்த முடிவு சக போட்டியாளர்களையும் நெகிழ செய்துள்ளது.

இப்போது பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் ஒரே கேள்வி ஜி.பி.முத்து மீண்டும் விளையாட்டுக்கு திரும்புவாரா என்பது தான்.

கடந்த பிக்பாஸ் 3வைது சீசனில் வனிதா விஜயகுமார் மிக முக்கிய போட்டியாளராக திகழ்ந்தார். ஆனால் 3 வைத்து வாரத்திலேயே வெளியேறினார்.

பின்னர் வைல்ட் கார்ட் வழியாக வனிதாவுக்கு மீண்டுமொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதே போல ஜி.பி.முத்துவும் வாய்ப்பு பெற வேண்டும் ரன்பதே அனைத்து ரசிகர்களின் குரலாக ஓபிஎல்லைஇணையத்தில் ஒலிக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?