என்ஜாயி எஞ்சாமி NewsSense
சினிமா

என்ஜாய் எஞ்சாமி : தெருக்குரல் அறிவு எழுப்பிய கேள்வியும், சந்தோஷ் நாராயணன் பதிலும்

NewsSense Editorial Team

சில தினங்களுக்கு முன்பு நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சியில் என்ஜாய் எஞ்சாமி பாடல், பாடகர் அறிவு இல்லாமல் மேடையில் பாடப்பட்ட நிலையில், தற்போது அவர் வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்று பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

என்ஜாய் எஞ்சாமி பாடல்

கடந்த ஆண்டு என்ஜாய் எஞ்ஜாமி சுயாதீன பாடல், இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் தயாரிப்பில் பாடகர்கள் அறிவு, தீ குரலில் வெளியாகியது.

இப்பாடல் வெளியானது முதலே இணையத்தில் டிரெண்டாகி, சர்வதேச அளவில் பரவலான வரவேற்பை பெற்றது.

இதுவரை இப்பாடலை 42 கோடிக்கும் அதிகமானவர்கள் யூ -டியூப்பில் கண்டுகளித்துள்ளனர்.

இப்படியான சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சியில் என்ஜாய் எஞ்சாமி பாடல் பாடப்பட்டது. அதனை பாடகிகள் தீ-யும், கிடாக்குழி மாரியம்மாளும் பாடினர். மேடையில் அறிவு இல்லாதது குறித்து பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.

அறிவு பகிர்ந்த பதிவு

இதுகுறித்து அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ ’என்ஜாய் என்சாமி’ பாடலை நான் இசையமைத்து, எழுதி, பாடியிருக்கிறேன். யாரும் எனக்கு பாடலுக்கான மெட்டும் வழங்கவில்லை, பாடலுக்கான வரிகளையும் வழங்கவில்லை. இப்பாடலின் வெற்றிக்காக கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாது, மனஅழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் கழித்தேன். இந்த பாடல் குழுவின் பங்களிப்பால் நிகழ்ந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த பாடல் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால் இது வள்ளியம்மாள் அல்லது நிலமற்ற தேயிலை தோட்ட அடிமைகளாக இருந்த என் முன்னோர்களின் வரலாறு அல்ல என்று கூறமுடியாது. எனது ஒவ்வொரு பாடலும் ஒடுக்கப்பட்ட மக்களின் காயங்களை கொண்டுள்ளது. ’என்ஜாய் என்சாமி’ பாடலைப்போல..

இந்த மண்ணில் 10000 நாட்டுறப் பாடல்கள் உள்ளன. இந்தப் பாடல்கள் அனைத்தும் முன்னோர்களின் மூச்சுக் காற்றை, வலியை, காதலை, வாழ்க்கையை சுமந்துள்ளன. இவை அனைத்தும் அழகான பாடல்கள் வழியே உங்களிடம் தற்போது பேசப்படுகிறது. ஏனெனில் நாங்கள், ரத்தமும், வியர்வையும் மெல்லிசை பாடல்களாகவும், கலைகளாகவும் மாறிப்போன தலைமுறையினர். இந்தப் பாடல்களின் மூலம் நாங்கள் பாரம்பரியத்தை எடுத்துச் செல்கிறோம்.

உங்கள் திறமையை நீங்கள் உறங்கும்போது யார் வேண்டுமானாலும் களவாடலாம். ஆனால் நீங்கள் விழித்திருக்கும்போது அதை யாரும் களவாட முடியாது. ஜெய் பீம்.. இறுதியில் எப்போதும் உண்மை வெல்லும்” என குறிப்பிட்டுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் பதில்

இதையடுத்து இதற்குப் பதிலளிக்கும் விதமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் "வாங்கோ வாங்கோ ஒன்னாகி" என்று பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் "என்ஜாய் என்ஜாமி" பாடல் உருவான விதம் பற்றி விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

அதில், “அறிவு ஓர் அற்புதமான கலைஞர். அவர் அமெரிக்காவில் இருந்த காரணத்தால்தான் சென்னை ஒலிம்பியாட் நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. ஒடுக்கப்பட்ட் மக்களுக்கான என் குரல் ஓங்கி ஒலிக்கும்,” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “இந்த பாட்டிற்கான ஐடியா தீ கூறியது. நம் வேரை போற்ற வேண்டும் எனற எண்ணத்தில் உருவானது. பின் நான், தீ மற்றும் அறிவு இணைந்து இந்தப்பாடலை உருவாக்கினோம்,” என குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சை

என்ஜாய் என்ஜாமி பாடல் சர்ச்சைக்கு உள்ளாவது இது முதல் முறை அல்ல.

பிரபல ரோலிங் ஸ்டோன், இதழில் என்ஜாய் எஞ்சாமி, நீயே ஒலி ஆகிய பாடல்கள் குறித்து கட்டுரை ஒன்றை ஆகஸ்ட் மாதம் வெளியிட்டிருந்தது. அந்த அட்டை படத்தில், பாடகி தீ மற்றும் ஷான் வின்சென்ட் டீ பால் ஆகியோரின் படங்கள் இடம்பெற்று இருந்தன.ஆனால் என்ஜாய் எஞ்ஜாமி பாடல் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அறிவின் புகைப்படம் வெளியாகவில்லை.

இது அந்த சமயத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஆனது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?