"இளையராஜாவுக்கு Maturity இல்ல, ரொம்ப மட்டமானவர்" - ஜேம்ஸ் வசந்தன் சர்ச்சை விமர்சனம் ட்விட்டர்
சினிமா

"இளையராஜாவுக்கு Maturity இல்ல, ரொம்ப மட்டமானவர்" - ஜேம்ஸ் வசந்தன் சர்ச்சை விமர்சனம்

ஒரு மனிதனாக அவர் மிகவும் தரக்குறைவானவர். மட்டமானவர். கொஞ்சம் முதிர்ச்சியற்றவர். அவர் சாதாரண மனிதராக இருந்திருந்தால், விமர்சனங்களுக்கு அவசியமில்லை.

Keerthanaa R

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு முதிர்ச்சி இல்லை என விமர்சித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ஜேம்ஸ் வசந்தன், இளையராஜாவின் பாடல்களுக்கு நான் எப்போதுமே ரசிகன், அதற்காக அவர் பற்றிய அனைத்தும் பிடித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.

சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் அதன் பிறகு சில படங்களுக்கு இசையமைத்திருந்தார், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் இவர் வெளியிடும் சில கருத்துகளால் சர்ச்சையில் சிக்குவார். வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் உடை குறித்து இவர் விமர்சித்திருந்தது ரசிகர்கள் மட்டுமல்லாது, பலரின் எதிர்ப்புக்கு உள்ளானது.

தற்போதும் இவர் இளையராஜா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்திருப்பது, திரையுலகினர் மத்தியில் சற்றே மனக்கசப்பை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம்.

நேர்காணலில் தொகுப்பாளர் ஜேம்ஸ் வசந்தனிடம், “நீங்கள் இளையராஜாவை தங்களின் மானசீக குரு எனக் கூறினாலும், அவ்வப்போது அவரை கர்வம் கொண்டவர் என விமர்சித்தும் வருகிறீர்கள். இதை எப்படி பார்ப்பது?” என கேள்வி எழுப்பினார்

ஜேம்ஸ் வசந்தன் பேசியதாவது, “இளையராஜா மாதிரி ஒரு கீழ்த்தரமான ஆளை பார்க்க்வே முடியாது. அவர் சிறந்த கம்போசர், ஞானி என்றெல்லாம் குறிப்பிடுகிறோம், அதற்கு தகுதியானவரும் கூட.

அவரது இசையை நான் விமர்சிக்கவில்லை. அதை செய்தால், நான் எனது குருவை விமர்சிப்பது போலாகும், நான் அவரிடமிருந்து கற்றிருக்கிறேன். எனக்கு அவரது சில பாடல்கள் பிடிக்காமல் போகலாம், ஏனெனில் அதில் கிரியேட்டிவிட்டி இல்லாமல் இருக்கும். இளையராஜாவின் பாடல்கள் குறித்து நான் மணிக்கணக்கில் பெருமையாக பேசுவேன்.

அவரது நடவடிக்கைகள் சமூகத்தை பாதிக்கிறபோது தான் நான் அதை விமர்சித்திருக்கிறேன்.

ஆனால் ஒரு மனிதனாக அவர் மிகவும் தரக்குறைவானவர். மட்டமானவர். கொஞ்சம் முதிர்ச்சியற்றவர். அவர் சாதாரண மனிதராக இருந்திருந்தால், விமர்சனங்களுக்கு அவசியமில்லை. கடந்த 25 ஆண்டுகளாக திரைத்துறையினர் பலர் அவரை சாம் என்று அழைத்திருக்கின்றனர்.

அவரை ஒரு போதகர் எனக் குறிப்பிட்டுள்ளனர். ரஜினி சார் அவரை எப்போதும் ‘சாமி’ என்றே குறிப்பிடுவார். அந்த அளவிற்கு அவர் ஆன்மீகம் குறித்து பேசுவார். ஆன்மீகம் என்பது முதிர்ச்சி, தாராள மனப்பான்மை, ஏற்றுக்கொள்ளுதல், புரிதல் மற்றும் சகிப்புத்தன்மையை உள்ளடக்கியது.

ஆன்மீகத்துக்குள் போகிறேன் எனக் கூறிவிட்டு, வெளியில் மிகவும் அசிங்கமாக பேசினார். உதாரணமாக, சில மாதங்களுக்கு முன் கூகுள் சார்பில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், இசைக் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, சம்பந்தமில்லாமல், முட்டாள் தனமாக பதிலளித்திருந்தார்.

“இயேசு கிறிஸ்து பிறந்தாரு, வாழ்ந்தாரு, இறந்து திரும்ப உயிர்பெற்று வந்தாருன்னு சொல்றாங்க. எனக்கு அதெல்லாம் தெரியல, ரமண மகரிஷி ஒருத்தர் தான் செத்து உயிர்த்தெழுந்தாரு” என்று இளையராஜா பேசியிருந்தார்.

இது ஆன்மீக நம்பிக்கை உள்ளவர்கள், குறிப்பாக இயேசுவை நம்புபவர்களின் மனதை காயப்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார். இயேசுவை நம்புபவர்கள் யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என நினைப்பவர்கள்.

ரமண மகரிஷி செத்துப் பிழைக்கவில்லை என அவர் பற்றி ஆவணப்படம் எடுத்த இயக்குநரே கூறியிருக்கிறார். வலிப்பு வந்து பல மணி நேரம் படுத்திருந்தார், இறக்கவில்லை. அதை இவர்கள் திரித்திருக்கிறார்கள். ஆனால் இளையராஜா இதைப்பற்றி எதுவும் சொல்லாமல், மற்றவரின் நம்பிக்கையை புண்படுத்தியிருக்கிறார்.

ஆன்மீகத்துக்குள் போனவருக்கு இத்தகைய புரிதல் இல்லை என்றால் அவர் ஏமாத்துக்காரர் தானே?” என பேசியிருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். அவரது இந்த கருத்து தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?