இலியானா: நண்பன் பட நடிகை கர்ப்பமா? வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்!  Twitter
சினிமா

Ileana D'Cruz: நண்பன் பட நடிகை கர்ப்பமா? வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்!

Priyadharshini R

நண்பன் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானாவின் இன்ஸ்டா போஸ்ட் தான் தற்போது இணையத்தை ஆக்கரமித்துள்ளது.

தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா டிகுரூஸ். தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் நண்பன் படத்தில் நடிகர் விஜய்யுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார்.

அந்த படத்தில் இடம் பெற்ற இருக்கானா இடுப்பிருக்கானா என்ற பாட்டு மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

சமூகவலைதளங்களில் எப்போது ஆக்டிவ்வாக இருக்கும் இவர் அவ்வபோது தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

இந்த நிலையில், இன்று காலை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், "நல்ல செய்தி! விரைவில் வரவுள்ள என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்ட புகைப்படத்தில், குழந்தைகளின் உடைகளை வெளியிட்டிருந்தார்.

எனினும், தனது காதலர் யார் என்ற விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை. அவரது இந்த பதிவை பார்த்ததும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை குவிக்க தொடங்கி விட்டனர்.

தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி இலியானா எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. யாருடைய கர்ப்பம் குறித்த அறிவிப்பு? இலியானாவிற்கு திருமணம் முடிந்ததா? என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

சமீபத்தில் நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரரான செபாஸ்டியன் லாரன்ட் மிச்செல் என்பவரை டேட்டிங் செய்து வருகிறார் என தகவல்கள் வெளிவந்தன.

கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுசல் ஜோடியுடன் மாலத்தீவில் இலியானாவும் ஒன்றாக காணப்பட்டார். அந்த புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார். அதில் கைப்பின் சகோதரர் செபாஸ்டியனும் ஒன்றாக காணப்பட்டார். கடைசியாக, நடிகர் அபிஷேக் பச்சனுடன் பிக் புல் என்ற படத்தில் இலியானா நடித்து உள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?