Shah Rukh Khan - Vijaykanth Twitter
சினிமா

Jawaan: விஜயகாந்த் படத்தை காப்பி அடித்தாரா அட்லீ? - புகார் அளித்த தயாரிப்பாளர்

Keerthanaa R

ஷாருக் கான் நடிக்கும் ஜவான் படம் தமிழில் வெளியான பேரரசு திரைப்படத்தின் காப்பி எனக் கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் புகார் பதிவு செய்துள்ளார்.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான் நடிக்கும் திரைப்படம் ஜவான். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நயன்தாரா, தீபிகா படுக்கோன், பிரியாமணி ஆகிய முன்னணி நாயகிகளும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. 2023ஆம் ஆண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜவான் திரைப்படம் தமிழில் வெளியான பேரரசு திரைப்படத்தின் காப்பி எனக் கூறி பேரரசு படத் தயாரிப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். 2006ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான படம் பேரரசு.

பிரகாஷ் ராஜ், நாசர், பாண்டியராஜன் ஆகியோர் நடித்த இந்த படத்தை உதயன் இயக்கினார். இந்த படத்தில் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். 

பேரரசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாரயணன் ஜவான் பேரரசு ஆகிய திரைப்படங்களில் ஒரே மாதிரியான கதை அம்சங்கள் இருப்பதாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். 

ஜவான் படத்தின் சில காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட்டன.

இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் இதற்கு முன் வெளியான ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களும், முறையே மௌன ராகம், சத்திரியன், அபூர்வ சகோதரர்கள், சக் தே இந்தியா படங்களின் மறு உருவாக்கம் என நெட்டிசன்கள் டிரால் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?