Kamal, Lokesh Kanagaraj, Suriya News Sense
சினிமா

விக்ரம் : லோகேஷ்கு லெட்டர், சூர்யாக்கு... - கமல் கொடுத்த ரோலக்ஸ் அப்டேட்

Antony Ajay R

"தரமான திரைப்படத்தை தாங்கிப்பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதில்லை" எனப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

அந்த வீடியோவில் கிட்டத்தட்ட விக்ரம் படக்குழுவிலிருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் கமல். "பெயர் தெரியாமல் பின்னணியில் பணியாற்றியவர்களுக்கும் உங்கள் பாராட்டுகள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியது தான் நியாயம்" என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

விஜய் சேதுபதி, பகத் ஃபாசிலை தம்பி எனக் குறிப்பிட்டு பாராட்டிய கமல், "அன்புத் தம்பி சூர்யா அன்பின் நிமித்தம் மட்டுமே கடைசிக் காட்சியைச் செய்தார்" என்றார்.

அத்துடன் சூர்யாவுக்கு நன்றி தெரிவிக்கும் படலத்தை அவர்கள் இணையும் அடுத்த படத்தில் முழுவதுமாக காட்டப்போவதாக கூறியுள்ளார்.

சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த வீடியோ மூலம் அடுத்த படத்தில் சூர்யா கதாப்பாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

முன்னதாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கடிதம் மூலம் நன்றிகூறியிருந்தார் கமல்ஹாசன். அந்த கடிதத்தில், "என் ரசிகர்கள் வித்தியாசமானவர்களாக இருக்க வேண்டும் என்ற என் ஆசையை பேராசை என்றனர் என் விமர்சகர்கள். ஆனால், என் முன்னணி ரசிகரே முன்னணி திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதை விட அதிகம்" என நெகிழ்ந்திருந்தார் கமல்ஹாசன்.

திரைத்துறையில் பல பரிட்சாத்தைய முயற்சிகளை மேற்கொண்டவர் கமல்ஹாசன். சராசரியான படங்களை புறந்தள்ளிவிட்டு வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்பவர். கிட்டத்தட்ட சினிமாவின் அனைத்து பகுதிகளையும் நிறப்பிவிட்ட கமல்ஹாசனுக்கு சமீப காலமாக ஏற்பட்டிருந்த தோய்வை விக்ரம் போக்கிவிட்டது என்றே கூறலாம்.

கமலின் சினிமா பசிக்கு தகுந்த விருந்தை கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அது ரசிகர்களின் பசிக்கும் விருந்தாக அமைந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை.

தனது தொடர் வெற்றிகளாலும் வித்தியாசமான, அதே நேரத்தில் சுவாரஸ்யமான கதை சொல்லல் முயற்சிகளாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் லோகேஷ்.

இதனால் அவரது யூனிவர்ஸின் அடுத்தடுத்த படங்களான் தளபதி67, விக்ரம் 3, கைதி 2 வின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

இதற்கிடையில் கமலின் புதிய வீடியோவால் கமல் - சூர்யா இணையும் அடுத்த படத்துக்கு ரசிகர்கள் மரண வெயிடிங்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?