Kamal Haasan -Lokesh  Twitter
சினிமா

விக்ரம்: லோகேஷுக்கு Lexus கார், உதவி இயக்குநர்களுக்கு பைக் - கமல்ஹாசனின் பரிசு மழை

ஜூன் 3ம் தேதி வெளியாகி வசூல் வேட்டை நடத்திக்கொண்டிருக்கிறது கமல்ஹாசனின் விக்ரம். டிவிட்டரிலும், கடிதத்தின் வாயிலாகவும் லோகேஷை பாராட்டி வந்த உலகநாயகன், இப்போது இயக்குநருக்கு ஒரு புத்தம் புது Lexus காரை அன்பு பரிசளித்துள்ளார்.

Keerthanaa R

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் போன்ற டாப் ஹீரோக்கள், சூர்யாவின் கேமியோ, கைதி reference என விக்ரம் வெளியாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பிலிருந்த ரசிகர்களுக்கு, எதிர்பார்த்ததை விட அதிகமாகவே விருந்தளித்திருந்தார் விக்ரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

ரிலீஸுக்கு முன் fan boy -ன் டிரிப்யூட்டாக இந்த படம் இருக்கும் என்று அவர் கூறிவந்தார். படம் வெளியானதும் எந்த அளவு அவர் கமல் ஹாசனை ரசித்திருக்கிறார், மதிக்கிறார் என்று நிரூபனமானது.

Kamal Haasan -Lokesh

விக்ரம் வெளிவந்த முதல் நாள் தமிழகத்தில் 20 கோடி, மூன்று நாட்களில் ஒட்டு மொத்தமாக 100 கோடி, இப்போது நான்கு நாட்கள் முடிவில் 175 கோடி வசூலைப் பெற்றுள்ளது படம்.


இந்த வெற்றியைப் படக்குழு கொண்டாடிவர, தன் அன்பில் தாராளம் காட்டியிருக்கிறார் உலகநாயகன். நேற்று லோகேஷுக்கு இவர் தன் கைப்பட எழுதிய கடிதம் இணையத்தில் வைரலானது.

இப்போது, விக்ரம் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்கு TVS Apache RTR பைக்கை பரிசளித்துள்ளார் உலக நாயகன். ADக்களுக்கே பைக் என்றால் கப்பலின் கேப்டன், கமலின் அதிதீவிர ஃபேன் பாய் லோகேஷுக்கு ஒன்றும் கொடுக்கவேண்டாமா?


ஒரு புத்தம் புதிய, விலையுயர்ந்த, லக்ஸுரி காரான Lexus ஐ பரிசளித்துள்ளார் கமல். இந்த Lexus ஹைப்ரிட் வகை காராகும். அதாவது, பெட்ரோல் கம் எலெக்ட்ரிக் வாகனம். "Lifetime settlement Letter" ஐ தொடர்ந்து இப்போது இந்த கார் "Lifetime Present" ஆக மாறியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?