Yash KGF 2
சினிமா

KGF 2 box office : ஒரே நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த ‘கே.ஜி.எஃப்2’

கேரளாவில் கேஜிஎஃப் திரைப்படம் 7.48 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஹிந்தியில் 53.95 கோடி கல்லா கட்டியிருக்கிறது.

Antony Ajay R


கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பையும் நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது. கன்னட படமான கேஜிஎஃப்-ன் முதல் பாகம் இந்திய அளவில் பேசப்பட்டதால் பான் இந்தியா மார்கெட்டை குறிவைத்து கேஜிஎஃப் 2 எடுக்கப்பட்டிருந்தது. பிரசாத் நீல் இந்த படத்தை இயக்கியிருந்தார். ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

கேஜிஎஃப் 2 படத்தின் வசூலை அறிந்துகொள்ள சினிமா உலகமே ஆர்வத்துடன் காத்திருக்கிறது. விஜய்யின் பீஸ்ட், கேஜிஎஃப் 2 -க்கு போட்டியாகக் கருதப்பட்ட நிலையில் பீஸ்ட் படத்தின் ரிவியூக்கள் அந்த கருத்தை மறுத்து விட்டன. பாலிவுட் மார்கெட்டிலும் கேஜிஎஃப் பட்டையக்கிளப்பும் என்பதால் பாலிவுட்டில் சில படங்களின் வெளியீடு தள்ளிப்போனது. ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்துக்கு நிகரான எதிர்பார்ப்புடன் களமிறங்கினார் ராக்கி பாய்.

KGF 2

பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தைத் தவிர வேறெந்த மாநிலத்திலும் கேஜிஎஃப்-ன் வசூலை நெருங்கவில்லை. முதல் நாள் முடிவில் பீஸ்ட் தமிழ்நாட்டில் 38 கோடியும் ஒட்டு மொத்தமாக 70 கோடியும் வசூல் செய்தது. இது கேஜிஎஃப்-ன் ஒட்டு மொத்த கலெக்‌ஷனில் பாதி. தமிழகத்துக்கு அடுத்தபடியாக விஜய்க்கு அதிகர ரசிகர்கள் உள்ள கேரளத்திலும் பீஸ்ட்டை பின்னுக்கு தள்ளியிருக்கிறது கேஜிஎஃப். கேரளாவில் கேஜிஎஃப் திரைப்படம் 7.48 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

ஹிந்தியில் 53.95 கோடி வசூல் செய்து அதிக வசூல் செய்த வார் படத்தின் சாதனையை முறியடித்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக கேஜிஎஃப் திரைப்படம் 134.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. ஒரே நாளில் இவ்வளவு பெரிய கலெக்‌ஷன் செய்த முதல் கன்னட திரைப்படமாக பீஸ்ட் விளங்குகிறது. நல்ல விமர்சனங்கள் வருவதனால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் கேஜிஃப் திரைப்படத்துக்கான காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?