சினிமா பிரபலங்கள் இடையிலான திருமனங்கள் ரசிகர்களை பெரிதாக பரவசப்படுத்தும். அது போலவே, அவர்கள் கருத்து வேறுபாடுகளால் பிரிந்தாலும் அது பெரிய அளவில் பேசப்படும்.
சமந்தா - நாக சைதன்யா இடையிலான திருமணமும் அவர்களின் விவாகரத்தும் திரையுலகில் மிகப் பெரிய அளவில் பேச்சு பொருளானது.
ஜானி டெப் - அம்பர் ஹெர்ட் விவாகரத்தை தொடர்ந்த பிரச்னைகல் ஹாலிவுட்டை உலுக்கி விட்டன.
தமிழ் திரையுலகில் உடன் பணிபுரிபவரை காதலித்துத் திருமணம் செய்துகொண்டு பின்னர் பல காரணங்களுக்காக விவாகரத்து பெற்ற ஜோடிகள் குறித்துக் காணலாம்.
கமல்ஹாசன் தனது முதல் மனைவியுடன் அதிக காலம் வாழவில்லை. விரைவிலேயே தன்னுடன் நடித்த சாரிகா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் என்ற இரு குழந்தைகள் பிறந்தனர். பெண்கள் இருவரும் வளர்ந்ததும் கமல் - சாரிகா ஜோடி விவாகரத்துப் பெற்றனர்.
அதன் பிறகு கமல் - கௌதமி காதலித்தனர். எனினும் திருமணம் செய்யாமலே இருவரும் பிரிந்தனர்.
புதிய பாதை படத்தில் நடித்ததன் மூலம் பார்த்திபனும் சீதாவும் காதலித்து திருமனம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு பிண் குழந்தைகள் பிறந்தனர். சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்தனர்.
80களின் முக்கிய நட்சத்திரமாக இருந்த இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். பின்னர் சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர்.
ராதிகா - பிரதாப் போத்தன் திருமணம் 1985ம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் அடுத்த ஒரு ஆண்டிலேயே இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.
அதன் பின் 1990ம் ஆண்டு பிரதாப் போத்தான் அமலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார். 22 ஆண்டுகள் கழித்து பிரதாப் - அமலா ஜோடி விவாகரத்து பெற்றனர்.
ராதிகா 1990ல் ரிச்சர்ட் கார்டி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கும் 2 ஆண்டுகளில் திருமணம் ஆனது.
அதன் பின்னர் 200ம் ஆண்டு ராதிகா சரத்குமார் திருமணம் நடைபெற்றது.
1986ல் ரகுவரன் - நடிகை ரோகினி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது. குழந்தை பிறந்த 6 ஆண்டுகளில் இவர்களுக்கு விவாகரத்து ஆனது.
பிரகாஷ் ராஜ் - லலிதா குமாரி திருமணம் 1994ம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். 2009ம் ஆண்டு இந்த ஜோடி விவாகரத்து பெற்றனர்.
அதன் பின்னர் பிரகாஷ் ராஜ் போனி வெர்மா என்பவரைத் திருமணம் செய்தார்.
கேமிராமேனும் இயக்குநருமான சுரேஷ் மேனனை நடிகை ரேவதி 1986ல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணமாகி 27 ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றனர்.
செல்வராகவன் சோனியா அகர்வால் இணைந்து வெற்றிப்படங்களைக் கொடுத்தனர். அதன் பிறகு இருவருக்கும் காதல் மலர திருமணம் செய்துகொண்டனர்.
திருமணமான சில வருடங்களிலேயே இருவருக்கும் விவாகரத்து நடக்க, செல்வராகவன் தன்னிடம் உதவி இயக்குநராக வேலை செய்த கீதாஞ்சலி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
இந்த வரிசையில் 2கே கிட்ஸ்களும் அறிந்த ஒரு விவாகரத்து இது. தெய்வத்திருமகள் படத்தின் மூலம் திருமணம் செய்துகொண்ட இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
ஆனால், ஒருவருடத்திலேயே இருவருக்கும் விவாகரத்து நடந்தது. தற்போது ஏ.எல் விஜய் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
அமலா பால் சிங்கிளாக இருக்கிறார்.
விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்கு வெர்சனில் இணைந்து நடித்த இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 4 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பின்னர் கருத்து வேறுபாடுகளால் பிரிந்தனர்.
தனுஷ் - ஐஸ்வர்யா
முன்னணி நடிகரான ரஜினி காந்த் மகளான ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா - லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த ஆண்டில் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust