லால் சலாம் : கேமியோ ரோலுக்கு இத்தனை கோடியா? ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? Twitter
சினிமா

லால் சலாம் : கேமியோ ரோலுக்கு இத்தனை கோடியா? ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Priyadharshini R

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் லால் சலாம்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ரஜினிகாந்த் மட்டுமில்லாமல் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு லால் சலாம் திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

ஐஸ்வர்யா ரஜினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லால் சலாம் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து, "மொய்தீன்பாய்.. வெல்கம்..." என்று கூறி இருந்தார்.

லால் சலாமில் மொய்தீன் பாயாக கேமியோ ரோலில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கியுள்ள சம்பள திரையுலகில் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

ரஜினிகாந்த் ஒரு கேமியோவுக்கு சம்பளமாக 40 கோடி ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது.

மொய்தீன் பாயின் கேமியோவை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ஞானவேல் மற்றும் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் ஞானவேல் படம், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து லோகேஷ் கனகராஜ் படத்திலும் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?