Leo Audio Launch ரத்து; அரசியல் அழுத்தம் தான் காரணமா? டிரெண்டிங்கில் #WeStandWithLEO ட்விட்டர்
சினிமா

Leo Audio Launch ரத்து; அரசியல் அழுத்தம் தான் காரணமா? டிரெண்டிங்கில் #WeStandWithLEO

Keerthanaa R

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி ஆடியோ லான்ச் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது

இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளனர். மேலும் இணையத்தில் இதனை விமர்சித்து மீம்கள் ஒரு பக்கமும், இதற்கு அரசியல் அழுத்தம் தான் காரணமாக இருக்கும் எனவும் பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனையடுத்து ட்விட்டரில், #WeStandWithLEO, #DMKFearsThalapathyVIJAY ஆகிய ஹாஷ் டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தில் அர்ஜுன் சார்ஜா, த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

கைதி, விக்ரமை தொடர்ந்து இந்த திரைப்படமும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பர்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி முதல் திரைப்படம் வெளியாகும் தேதி வரை தினமும் அப்டேட் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்திருந்தது. அதன்படியே, தினமும் மாலை போஸ்டர்கள் போன்ற அப்டேட்கள் வெளியாகின.

இந்நிலையில், நேற்று ஆடியோ லான்ச் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

எதிர்பார்க்கப்பட்ட மாலை 6 மணிக்கு அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. மாறாக இரவு, லியோ படத்தினை தயாரிக்கும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக X தளத்தில் தெரிவித்திருந்தது.

“இசை வெளியீட்டு விழாவுக்கு பாஸ்கள் கேட்டு பலரும் கோரிக்கை வைப்பதாலும், பாதுகாப்பு காரணங்களினாலும் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளோம்.

அதற்கு பதிலாக படம் குறித்த அப்டேட்களை நாங்கள் ரசிகர்களுக்கு வழங்குவோம்.

பின்குறிப்பு: இது அரசியல் அழுத்ததினால் அல்லது வேறு சில காரணங்களினால் எடுக்கப்பட்ட முடிவல்ல என்பதை தெரிவித்துகொள்கிறோம்” என்று அந்த பதிவில் இருந்தது

இந்த செய்தி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தினாலும், உண்மையில் இதற்கு அரசியல் அழுத்தம் தான் காரணம் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே, தனது திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் விஜய்யின் பேச்சு டிரெண்டாகி வருகிறது. அவரது ஸ்பீச்சுக்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் நபர்கள் ஏராளம். சமீப காலமாக விஜய் அரசியலில் கால்பதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு, அதனை உறுதி செய்யும் விதமாக ரசிகர்மன்ற நடவடிக்கைகள் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது

மறுபக்கம், #WeStandWithLEO, #DMKFearsThalapathyVIJAY ஆகிய ஹாஷ் டேக்குகளை பயன்படுத்தி ரசிகர்கள் நடிகருக்கு ஆதரவு தெரிவிப்பதாக பதிவிட்டு வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?