Leo : ரிலீஸுக்கு முன்பே ரஜினியின் ஜெயிலர் கலெக்‌ஷன் சாதனையை முறியடித்த லியோ - எத்தனை கோடி? Twitter
சினிமா

Leo : ரிலீஸுக்கு முன்பே ரஜினியின் ஜெயிலர் கலெக்‌ஷன் சாதனையை முறியடித்த லியோ - எத்தனை கோடி?

Priyadharshini R

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்ஜய் தத், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின் உள்ளிட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகி உள்ள லியோ ரிலீஸுக்கு இன்னும் 18 நாட்களே உள்ளது. இப்படம் வெளியாவதற்கு முன்பே பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்து வருகிறது.

லியோ படம் ரிலீஸாவதற்கு முன்பே வெளிநாடுகளில் அட்வான்ஸ் விற்பனை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படம் ஏற்கனவே UK பாக்ஸ் ஆபிஸில் அதிக புக்கிங் ஆன தமிழ் படமாக மாறியிருக்கிறது.

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றான லியோ, அட்வான்ஸ் விற்பனையில் புதிய வணிக சாதனையை பதிவு செய்துள்ளது.

இங்கிலாந்து பாக்ஸ் ஆபிஸில் மற்ற பெரிய தமிழ் படங்களான பொன்னியின் செல்வன்-1, ஜெயிலர் மற்றும் பொன்னியின் செல்வன்-2 போன்ற படங்களை லியோ மிஞ்சியுள்ளது.

வர்த்தக வலைதளமான sacnilkன் அறிக்கையின்படி, லியோ படம் அதன் முதல் நாளில் சுமார் ரூ. 3 கோடி (£305K) முன்கூட்டியே மொத்த வசூலை செய்துள்ளது.

கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் நாளில் 2.5 கோடி (£250K) வசூலித்தது. ரஜினியின் ஜெயிலர் படம் 2.2 கோடி (£222.8K) வசூலித்தது.

கோவிட் காலத்திலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளிய மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜுடன் விஜய் நடித்துள்ள இரண்டாவது படம் லியோ என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?