Lollu Sabha team is back - Breaking Bad becomes Joking Bad Twitter
சினிமா

Lollu Sabha : மீண்டும் வருகிறது ’லொள்ளு சபா’ - நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட Glimpse Viral

Priyadharshini R

தமிழ் ரசிகர்களுக்கு ஃபேவரட்டான ஷோக்களில் ஒன்று இந்த லொள்ளு சபா. கடந்த 2003 முதல் 2008 வரை தனியார் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வந்தது.

பல படங்களையும் தங்கள் பாணியில் ஸ்பூஃப் செய்து தமிழ் ரசிகர்களை ரசிக்க வைத்தனர்.

இந்த லொள்ளு சபாவின் மூலம் தான் சந்தானம், சுவாமிநாதன் போன்ற பல நகைச்சுவை கலைஞர்கள் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்கள்.

Netflix

இந்நிலையில் இந்த டீம் மீண்டும் தமிழ் ரசிகர்களை சிரிக்க வைக்க வருவதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ஒரு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

சிரந்த வெப் சீரீஸ்களில் முதன்மையாக கருதப்படும் பிரேக்கிங் பேட் சீரிஸை இந்த லொள்ளு சபா குழுவினர் ஸ்பூஃப் செய்துள்ளதை நெட்பிளிக்ஸ் நாளை வெளியிடுகிறது.

இதில் வால்டர் வைட் கதாப்பாத்திரத்தை நகைச்சுவை நடிகர் சுவாமிநாதன் ஏற்று நடித்துள்ளார்.

இதன் Glimpse வீடியோவை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது. வால்டர் வைட்டின் மிகவும் பிரபலமான வசனத்தை சுவாமிநாதன் இந்த க்ளிம்ப்ஸில் பேசி ஸ்பூஃப் செய்திருக்கிறார்.

மீண்டும் லொள்ளு சபா நாயகர்கள் வருவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை நாளை மாலை 6 மணிக்கு நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் யூடியூப் சேனலில் பார்க்கலாம் என அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?