Movies to be released on OTT this week Twitter
சினிமா

OTT Release : மாமன்னன் முதல் ரெஜினா வரை - இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்கள்!

Priyadharshini R

திரையரங்குகளில் புது படங்கள் எப்படி வெளியாகிறதோ, அதே போல் ஓடிடி தளங்களிலும் வாரம் தோறும் பல படங்கள் வெளியாகிறது.

இவற்றில் சில படங்கள் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற பின்னர், ஓடிடி தளங்களில் வெளியாகிறது.

இன்னும் சில திரைப்படங்கள், ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடப்படுகின்றன. ஓடிடி தளத்திலும் கதை களம் கொண்ட திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

அப்படி இந்த வாரம் OTT வெளியாக இருக்கும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

சிங்க்

முதல் நீ முடிவும் நீ படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் சிங்க். விகாஸ் ஆனந்த் ஸ்ரீதரன் இயக்கியுள்ள படத்திற்கு அபிஜித் ராமசுவாமி இசையமைத்துள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் மோனிகா, சௌந்தர்யா பாலா நந்தக்குமார், நவீன் ஜார்ஜ் தாமஸ் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

மாமன்னன்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில்,வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான மாமன்னன் திரைப்படம் ஜூலை 27ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. வடிவேலுவின் வித்தியாசமான நடிப்பில் வெளியான இத்திரைப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

ரெஜினா

மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவான ரெஜினா படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழியில் இத்திரைப்படம் ஜூன் 23ந் தேதி திரையரங்கில் வெளியானது. இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

கால்கூட் வெப் தொடர்

நடிகர் விஜய் வர்மா நடிப்பில் இயக்குநர் அருணாப் குமார் இயக்கியுள்ள வெப் தொடர் தான் கால்கூட். இத்தொடர், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ஜூலை 27ஆம் தேதி முதல் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.

தி விட்சர் சீசன் 3

இந்த வெப் தொடரை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 27ஆம் தேதி முதல் கண்டு மகிழுங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?