Youyube  Canva
சினிமா

Despacito டு Baby : YouTube -ல் ஒரு பில்லியன் பார்வையாளர்களைக் கடந்த மியூசிக் வீடியோக்கள்

Antony Ajay R

நமக்கெல்லாம் டிரெண்டிங் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியது யூடியூப் தான். 2005ம் ஆண்டு உருவாக்கப்பட்ட யூடியூபில் தமிழ் சமுகமும் தீவிர அங்கமானது ஜியோவின் வருகைக்குப் பிறகு தான். நம் பாடல்கள், வீடியோக்கள், கருத்துக்கள் உலகம் முழுவதும் சென்று சேர்ந்ததும் உலக விஷயங்கள் நம்மை வந்து சேர்ந்ததும் அப்போதிருந்து தான்.

சரி இப்போது ஏன் இதெல்லாம் என்றால், கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக நமது முன்னணி பொழுதுபோக்காக இருக்கும் யூடியூபில் முன்னணியிலிருக்கும் வீடியோக்களைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

1.PSY- Gangnam Style

தென் கொரிய பாடகரான PSY-ன் கங்னம் ஸ்டைல் பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. பாப் கலாச்சாரத்தின் ஒரு குறியீடாக திகழும் அந்த பாடல் யூடியூப் அவ்வளவு பிரபலமாக இல்லாத போதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கைகளை மூடி எக்ஸ் வடிவில் வைத்து குத்தித்து அந்த பாடலுக்கு ஆட்டம் போட வைத்தது. 2012ம் ஆண்டே அப்படி ஒரு வெற்றியை குவித்த பாடல் இப்போது 4 பில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறது.

2. Justin Bieber- Baby

நீங்கள் ஏதேனும் ஒரு ஆங்கில பாடலை கேட்டிருக்கிறீர்களா? ஒன்றே ஒன்றுதான் கேட்டிருக்கிறீர்கள் என்றால் அது இந்த பாடலாக தான் இருக்கும். பிற மொழிப்பாடல்களில் நமக்கெல்லாம் ஈர்ப்பு வரத் தொடங்கியதில் இந்த பாடலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஜஸ்டின் பீபரின் முதல் பாடலும் இது தான். இப்போது வரை இந்த பாடல் 2.5 பில்லியன் பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

3. Katy Perry- Dark Horse

கேட்டி பெர்ரியின் இந்த பாடல் காப்பிரைட் சர்ச்சைகளை கடந்து வந்திருக்கிறது. 2014ம் ஆண்டு வெளியான டார்க் ஹவுஸ் ஆல்பத்தில் 7 பாடல்கள் உண்டு. அதில் அதிகம் பேசப்பட்ட இந்த பாடல் இப்போது வரை 3.3 பில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது.

4. Luis Fonsi - Despacito ft. Daddy Yankee

டெஸ்பாசிட்டோ தான் இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட யூடியூப் வீடியோ ஆகும். ஸ்பானிஷ் மொழிப் பாடலான இது 7.9 பில்லியன் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள இசை விமர்சகர்கள் இந்த பாடலைப் பாராட்டினர். இந்த பாடலின் வெற்றிக்கு பின்னர் இதனை ஜஸ்டின் பீபருடன் ரீமிக்ஸ் செய்தனர். அந்த வீடியோவும் வெற்றி பெற்றது.

5. Ed Sheeran- Shape of You

இதுவரை 5.4 பில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள ஷேப் ஆஃப் யூ பாடல் 60வது கிராமி விருது விழாவில் சிறந்த தனி நபர் பாப் பாடலுக்கான விருதினைப் பெற்றது. இந்தியாவிலும் இந்த பாடல் சக்கைப் போடு போட்டது.

ஒரு பில்லிய்ன் பார்வைகளை கடந்த மேலும் சில பாடல்கள்

Wiz Khalifa - See You Again ft. Charlie Puth- 5.5 Billion

Mark Ronson - Uptown Funk ft. Bruno Mars- 4.6 Billion

Justin Bieber- Sorry- 3.5 Billion

Katy Perry- Roar- 3.6 Billion

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?