பிரம்மாண்ட வீட்டில் வாழும் நெப்போலியன்  Twitter
சினிமா

பேஸ்கட் பால் கோர்ட் டூ ஒயின் அறை : பிரம்மாண்ட வீட்டில் வாழும் நடிகர் நெப்போலியன்!

Priyadharshini R

தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ, குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நெப்போலியன்.

அதுமட்டுமின்றி அரசியலிலும் பிசியாக ஈடுபட்டு வந்த நெப்போலியன் மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார்.

நெப்போலியனுக்கு குணால், தனுஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் தனுஷ் என்பவர் மாற்றுத்திறனாளி ஆவார்.

இவருடைய மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா வந்த நெப்போலியன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

நெப்போலியன் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, அங்கு பிசினஸ் செய்ய தொடங்கிவிட்டார்.

அவரின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படம் தன் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அவரது இரு மகன்களுக்காகவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வீடு நெட்டிசன்களை மிரள வைத்துள்ளது.

12 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் அந்த வீட்டில்,

ஹோம் தியேட்டர், மினி பார், பேஸ்கட் பால் கோர்ட் என வீட்டையே பேலஸாக மாற்றிமைத்துள்ளார்.

அப்படி என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன? வாருங்கள் பார்ப்போம்

சன் ரூம்

பொதுவாக சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வரும் வகையில் ஒரு அறை அமெரிக்காவில் இருக்குமாம். அந்த அறை நெப்போலியனின் வீட்டிலும் உள்ளது.

நீச்சல் குளம்

வீட்டின் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் அருவி கொட்டுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

சில சமயங்களில் அந்த நீச்சல் குளம் பார்ட்டி ஏரியாவாகவும் மாறிவிடுகிறது. அந்த இடத்தில் நண்பர்களுடன் இணைந்து பார்ட்டி நடந்தப்படுகிறது.

ஒயின் அறை

இந்த வீட்டில் ஒயின் அறை என்று ஒன்று உள்ளது. வீட்டிற்கு வருபவர்களுக்கு வழங்குவதற்காக இந்த ஒயின் பாட்டில்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவேளை இது தான் அமெரிக்காவின் விருந்தோம்பலோ!

ஹோம் தியேட்டர்

தற்போது எல்லார் வீடுகளிலும் ஹோம் தியேட்டர் இருக்கிறது. நடிகர்கள் வீட்டில் இருப்பது சாதாரணம் தான் என்றாலும், நிஜமாகவே தியேட்டர் போல் இருக்குமாம்.

பேஸ்கட் பால் கோர்ட்

நெப்போலியனின் வீட்டிலேயே பேஸ்கட் பால் கோர்ட் உள்ளதாம். ஒர்ஜினல் பேஸ்கட் பால் அரங்கு எப்படி எந்த அளவு இருக்குமோ அந்த அளவிற்கு வீட்டிற்குள் கட்டி வைத்துள்ளனர்.

பாரம்பரிய சிலைகள்

அமெரிக்காவில் குடியேறும்போது இந்தியாவில் இருந்த பொருட்கள் அனைத்தும் கப்பலில் அமெரிக்கா வந்துள்ளது. முறையான அனுமதி பெற்று பாரம்பரிய சிலைகளை அமெரிக்கா எடுத்து சென்றுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?